தமிழக பாரம்பரியத்தை மக்களுக்கு எடுத்து கூறும் போது அரசியல் நுழைவதாகவும், தமிழகத்தில் உள்ள கோவில்களின் சொத்துக்களை திருடி வருகிறார்கள். திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு போகிறது என தெரியவில்லை எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

 

உலக மரபு வார விழாவை முன்னிட்டு மதுரை தியாகராஜர் கல்லூரியில் அமைக்கப்பட்ட "தென் தமிழக குடைவரை கோயில்கள்” குறித்த புகைப்பட கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசுகையில், "தமிழகத்தில் உள்ள பாரம்பரியத்தை மக்களுக்கு சொல்லக்கூடிய வாய்ப்பு இல்லையே எனும் மனவேதனை என்னிடத்தில் இருந்தது. தமிழக பாரம்பரியத்தை மக்களுக்கு எடுத்து கூறும் போது அரசியல் நுழைகிறது. பாரம்பரியம் இது அல்ல அது என பல சர்ச்சைகள் வருகிறது. ஜனநாயக நாட்டில் சர்ச்சைகள் வரலாம், எல்லோரும் எல்லாம் பேசலாம்.


 



தமிழகத்தின் பாரம்பரியத்தை நம் முன்னோர்கள் பாறைகளில் அருமையாக வடிவமைத்து உள்ளனர். அமைச்சர் வருகிறார் என பாரம்பரிய இடங்களில் வெள்ளை அடித்து விடுகிறார்கள். வெள்ளை அடிக்கப்பட்டதற்கு பின்னால் உள்ள சரித்திரம் யாருக்கும் தெரிவதில்லை. தமிழ் இலக்கியங்களுக்கும், குடைவரை கோவில்களுக்கும் தொடர்புகள் உள்ளன. குடைவரை கோவில்களில் உள்ள எழுத்துக்களுக்கும் தமிழ் மொழி, ஆன்மிகம், இலக்கியம் ஆகியவற்றிக்கும் தொடர்பு உள்ளது. நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பரியம் தான். அதனை நாம் பாதுகாக்க வேண்டும்.

 

மாணவர்கள் டாக்டராக,இஞ்சினியர்கள் என எது வேண்டுமானாலும் ஆகலாம், ஆனால் நம்முடைய தமிழ் மரபுகளை அறிந்து பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் சொத்துக்களை திருடி வருகிறார்கள், கோவில்களில் திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு போகிறது என தெரியவில்லை. நம் சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு, இந்துக்கள் எவ்வாறு கோவில்களை கட்டியுள்ளனர் என காட்சிப்படுத்தப்பட்டுள்ளன" என பேசினார்.



 

தமிழக குடைவரை கோவில்கள் கடினமான பாறைகளால் குடைந்து உருவாக்கப்பட்டவை. கடினமான உழைப்புடன் உருவாக்கப்பட்டவை. இதற்காக தனிப்பட்ட தொழில்நுட்பம் தகுதியான பாறைகளை தேர்வு செய்து,

அதன் பகுதியையும் தீர்மானித்து, பாதியிலேயே விடப்பட்ட சில கோவில்களும் உள்ளன. பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை 100 இல் 70 வதுக்கும் மேற்பட்டவை காவிரிக்கு தென் பகுதியில் உள்ளன. 200 - 250 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளன 3 ஆண்டுகளுக்கு ஒரு கோவில் கோவில் கட்டும் கலையை ஒரு இயக்கமாகவே செய்துள்ளனர்.