தேனி, திண்டுக்கல் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை - மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தேனிக்கு ரெட் அலர்ட் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக மழை பரவலாக பெய்து வந்த நிலைில், தென்மாவட்டங்களான  விருதுநகர், மதுரை மற்றும் தேனி மாவட்டத்திலும் அதிகனமழை பெய்து வருகிறது. 

Continues below advertisement

TN Rain Alert: விருதுநகர், தேனி, மதுரைக்கு ரெட் அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் எங்கெல்லாம் வெளுக்கப்போது மழை?


தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

திண்டுக்கல்லில் தொடர் மழை:

தேனி மாவட்டத்தில் நேற்று மதியம் 2.30க்கு சாரல் மழையாக தொடங்கிய மழை அதிக கன மழையாக மாறியது. இதனை தொடர்ந்து சாரல் மழை கன மழையாக மாறியது சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் பெய்த கன மழை தொடர்ச்சியாக அதி கன மழையாக மாறிய சுமார் 4 மணி நேரமாக கொட்டித் தீர்த்தது. மதியம் 2.30க்கு தொடங்கிய கன மழை இரவு முழுவதும் இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் இன்று காலை வரையில் 3 மாவட்டங்களுக்கு இடி மினலுடன் கூடிய அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்ததையடுத்து.

Dawood Ibrahim: உச்சகட்ட பரபரப்பு! நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமிற்கு விஷம்? பாகிஸ்தானில் தீவிர சிகிச்சை?


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சஜீவனா உத்தரவிட்டார். நேற்று மதியம் தொடங்கிய மழை மறு நாள் அதாவது இன்று காலை வரையில் தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக தமிழக கேரள எல்லை  மலையோர மாவட்டமாக தேனி மவட்டம் இருப்பதால் பனிபொழுவும் வழக்கத்துக்கு மாறாக இன்று அதிகமாக இருந்தது.

அதே போல் தேனி மாவட்டத்தை தொடர்ந்து அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்திலும் மழையின் எதிரொலியால் கொடைக்கானல் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட  அளிக்கப்பட்டு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola