அம்மாவின் தொண்டர்கள் இணைந்து பணியாற்றுவோம், எங்களோடு வருபவர்கள் அனைவரோடும் சேர்ந்து பணியாற்றுவோம், மத்திய அரசு நாட்டுக்கும் பாராளுமன்றத்திற்கும் சிறந்த பாதுகாப்பை வழங்கவேண்டும் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் பேட்டி.
மதுரை மற்றும் நெல்லை மண்டல அமமுக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மதுரை பாண்டியன் ஹோட்டலில் உள்ள அரங்கில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக புறப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மதுரை கோச்சடை பகுதியில் செய்தியாளர்கள் சந்தித்து பேசியபோது.”அமமுக தேர்தல் பொறுப்பாளர்களுடன் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக கன்னியாகுமரி முதல் திண்டுக்கல் வரையிலான 59 சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு
அமமுகவின் தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரியிலோ முடிவாகும் என்றார்.
சசிகலாவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என்ற கேள்விக்கு?
அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. அதனால் பன்னீர்செல்வம் எங்களோடு பணியாற்றி வருகிறார் . எங்களோடு வருபவர்கள் அனைவரோடும் சேர்ந்து பணியாற்றுவோம்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா பதவியேற்பு குறித்த கேள்விக்கு
தேமுதிக பொதுச்செயலாளருக்கு வாழ்த்துக்களை ஏற்கனவே தெரிவித்துள்ளேன்
சென்னையில் மழை பாதிப்பு குறித்து கேள்விக்கு
தலைமைச் செயலாளர் அறிக்கைப்படி 90 சதவீதத்திற்கு மேல் சகஜ சூழ்நிலை திரும்பிவிட்டது எனவும், மற்ற ஏரியாக்களிலும் திரும்பிவிடும் என கூறியிருக்கிறார் அதன்படி நடக்கும் என நம்புகிறேன் என்றார்.
எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவுகள் கலந்தது குறித்த கேள்விக்கு
கடல்நீரில் கலந்த எண்ணெயை அகற்றுவதற்கான உரிய உபகரணங்களை கொண்டு அதனை நீக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்
பாராளுமன்றத்தில் இளைஞர்கள் நுழைந்தது குறித்த கேள்விக்கு :
மத்திய அரசு நாட்டுக்கும் பாராளுமன்றத்திற்கும் சிறந்த பாதுகாப்பை வழங்கவேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை
திமுக ஆட்சியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு :
திமுக ஆட்சி தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றாத மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சியாக போய்க்கொண்டிருக்கிறது.
மகளிர் உரிமை தொகை ஜனவரி முதல் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த கேள்விக்கு :
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் என திமுக தேர்தல் வாக்குறுதிஅறிவித்தார்கள் ஆனால் தற்போது அப்படி பண்ணவில்லை தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை அறிவிப்பேன் என சொல்லியதை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என்றார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - CM Letter: மிக்ஜாம் புயல் பாதிப்பு: கடன் தவணையை நீட்டிச்சு அறிவிங்க.. நிதியமைச்சருக்கு முதல்வர் கடிதம்..
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - DMDK Meeting: மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும் : தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்..