திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ராமநாதபுரத்தில் ஸ்ரீமாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், பகவதி அம்மன், பாலமுருகன், செல்வ விநாயகர் கோயில்களின் உற்சவ விழா 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வருடாபிஷேகம் மற்றும் மூல விக்கிரகங்களுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சாமிகளுக்கு கரகம் பாலிக்கப்பட்டு, சாமி வீதி உலா நடந்தது.


Helicopter Crash: மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் உயிரிழப்பு




அதைத்தொடர்ந்து திங்கட்கிழமை அம்மன்கள் குடி புகுதல் நிகழ்ச்சியும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடந்தன. அதன் பின்னர் ஊர் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஊர் மக்கள் ஒருவருக்கொருவர் வர்ணப் பொடிகளை தூவி, மஞ்சள் நீர் தெளித்து விளையாடினர். அதன் பின்னர் முத்தாலம்மனுக்கு பந்தய மரம் ஏறுதல் என்ற கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு கோயிலுக்கு முன்பாக 60 அடி உயர கழுகு மரம் நடப்பட்டது. இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு கழுமரத்தில் ஏறினர்.


CM MK Stalin: சோஷியல் மீடியாக்களை கவனிங்க - மோதல்கள் உண்டாக்குவோர் மீது நடவடிக்கை எடுங்க - முதலமைச்சர் உத்தரவு..!


Director Mysskin: ‘விஜய் மாதிரி டீசன்ட்டா நடந்துக்கோங்க’.. லியோ படம் பற்றிய கேள்விக்கு கடுப்பான மிஷ்கின்...!


ஆனால் முழுவதுமாக ஏற முடியாமல் பாதியிலேயே கீழே இறங்கினர். அதில் தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற வாலிபர் கழுமரத்தின் உச்சி வரை ஏறி, அங்கு கட்டியிருந்த நவதானியங்கள், தேங்காய், வாழைப்பழம் அடங்கிய காணிக்கை பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார். அவரை பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்று, தோள் மேல் தூக்கி அவரை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் அவருக்கு ஊர் மக்கள் சார்பாக சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் பந்தய மரத்தில் ஏறியதற்கு வெற்றி பரிசாக 5000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண