லியோ படத்தின் அப்டேட் பற்றி கேள்வி எழுப்பியதற்கு, ஏற்கனவே நிறைய சொல்லிவிட்டேன் என இயக்குநர் மிஷ்கின் பதிலளித்த சம்பவம் விஜய் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. 


லியோ படம்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் 2வது முறையாக இணைந்துள்ள படம் ‘லியோ’. இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கும் நிலையில் அனிருத் இசையமைக்கிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராக் காஷ்யப் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


லியோ படத்தின்  முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. இதில் விஜய் தொடர்பான காட்சிகள் நேற்று முடிவடைந்தது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே எடுக்க வேண்டி இருப்பதால் வரும் வாரத்தில் லியோ படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் ரிலீசாக இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்து அடுத்தடுத்து படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இப்படியான நிலையில் லியோ படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் படம் தொடர்பான தகவல்களை பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இயக்குநர் மிஷ்கினும் லியோ குறித்தும், விஜய் குறித்தும் பேசியிருந்தார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 


அட்வைஸ் பண்ண மிஷ்கின்


இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் நேற்று நடைபெற்றது. இந்தப் படத்தில் வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடித்துள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே வந்த அவரிடம், செய்தியாளர்கள் லியோ படத்தின் அப்டேட் பற்றி கேட்டார்கள். அதற்கு, ‘ஒன்னுமே இல்லை. ஏற்கனவே நிறைய சொல்லிவிட்டேன்’ என சொன்னார். 


ஆனால் மிஷ்கினை விடாமல்  விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது சொல்லுங்க என கேள்வி எழுப்பப்பட்டது. உடனே மிஷ்கின், ‘டேய் கண்ணா.. விஜய் மாதிரி பொறுப்பா நடந்துகோங்க. டீசன்டா நடந்துகோங்க. அவர் ஒரு ஸ்வீட் பெர்சன். உங்களுக்கு நிறைய பொறுப்பு இருக்கு’ என சொன்னார். தொடர்ந்து லியோ படத்தில் கேரக்டர் பற்றி கேட்டதற்கு, ‘நான் படத்துல ஒரு சின்ன வில்லன்பா. விஜய் கூட பணியாற்றியதில் மகிழ்ச்சி’ என மிஷ்கின் கூறினார்.