திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. அந்த வகையில், நேற்று முன்தினம் மாலை சிறிதுநேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் கடுமையான வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இதனை தொடர்ந்தது. மாலை 4 மணிக்கு மேல் வானில் கருமேக கூட்டங்கள் கூடின. சில மணி நேரம் வரை மேக மூட்டத்துடன் மட்டுமே காணப்பட்ட வானிலை மாலை 5.30 மணி அளவில் சாரல் மழையாக தொடங்கி சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது.
மேலும் படிக்க: மும்பை : நகைகளை ’லபக்கிய’ எலிகள்.. நடுரோட்டில் பதறிய பெண்.. போலீஸ் செய்த பரபர வேலை.. சேஸிங் சீனே இதுதான்..
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் கொட்டி தீர்த்த மழையால் திண்டுக்கல் நாகல்நகர் ஆர்.எஸ்.சாலை, ஏ.எம்.சி.சாலை, பஸ் நிலைய பகுதி, திருச்சி சாலை, மதுரை சாலை உள்பட பல நகரின் முக்கிய இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ஒருசில இடங்களில் முழங்காலுக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் நீந்தியபடி வாகனங்கள் சென்றன. பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தாலும் மாலையில் கொட்டிய மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் பழனி, கொடைக்கானல் பகுதியில் நேற்று பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஆனால் மாலை 6 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு இரவு வரை மழை நீடித்தது. இந்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழல் நிலவியது.
இந்த நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 25 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்