திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த சித்தையன்கோட்டை அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (25). இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். அவருடைய மனைவி பவித்ரா (21). இவர்களுக்கு கனிஷ்காஸ்ரீ (4), ஹர்ஷிதாஸ்ரீ (1½) என்ற 2 மகள்கள். நரசிங்கபுரம் அருகே உள்ள தேங்காய் கம்பெனியில் பவித்ரா கூலி வேலை செய்து வருகிறார். அதன்படி நேற்று அங்கு வேலைக்கு சென்றுள்ளார்.
AIADMK EPS: “ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக வளர்ச்சியை தடுக்க முடியாது” - இபிஎஸ் ஆவேச பேச்சு
அப்போது தனது 2 குழந்தைகளையும் அங்கு அழைத்து சென்றார். பவித்ரா உள்பட 7 பெண்கள், தேங்காய்யில் பருப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அங்கு குழந்தைகள் கனிஷ்காஸ்ரீ, ஹர்ஷிதாஸ்ரீ ஆகியோர் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது தேங்காய் கம்பெனியின் வளாகத்தில் திறந்தநிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள், எதிர்பாராத விதமாக குழந்தை ஹர்ஷிதாஸ்ரீ தவறி விழுந்துள்ளார். சிறிதுநேரத்தில் தண்ணீரில் மூழ்கிய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
வருங்காலத்தை வழிநடத்த உள்ள உதயநிதி ஸ்டாலின் - கிரிக்கெட் விழாவில் அமைச்சர் மூர்த்தி பேச்சு
இதற்கிடையே கனிஷ்காஸ்ரீ, தனது தங்கை தொட்டிக்குள் விழுந்தது குறித்து தனது தாய் பவித்ராவிடம் தெரிவித்தார். இதனையடுத்து பவித்ரா மற்றும் அவருடன் வேலை பார்த்த பெண்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது குழந்தை ஹர்ஷிதாஸ்ரீ தொட்டிக்குள் சடலமாக மிதந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை பார்த்து தாய் பவித்ரா கதறி அழுத காட்சி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திறந்த நிலையில் இருந்த தரைமட்ட தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்