மது போதையால் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வரும் இளைய சமுதாய சந்ததிகளின் எதிர்காலம் மட்டுமல்லாமல் தற்போதைய வாழ்வியல் சூழல் மோசமான பழக்கங்களுக்கும் அடிமையாகி வருகின்றனர். அதேபோல் மதுபோதையால் பல்வேறு குற்ற சம்பவங்களும் சாலை விபத்துக்களும் நடந்து வருகிறது.
தொடர் சர்ச்சை.. பஞ்சாப் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பன்வாரிலால் புரோகித்!
போதை பழக்கம் தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் பெருகி நாட்டை சீர்கெடுக்கும் வகையில் பரவியுள்ளதன் எதிரொலியாக ஆங்காங்கே இளம் பெண்களும் குடி போதையில் சாலையில் திரிவதும், போதையில் பல்வேறு செயல்கள் செய்வது குறித்த வீடியோக்கள் சமூக வளைதலங்களில் பார்க்கவும் முடிகிறது.
இதேபோல்தான் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையின் ஓரமாக இளம் பெண் ஒருவர் அளவு கடந்த மது போதையில் மயங்கி உள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீரை ஊற்றி எழுப்பினார். மது போதையில் இருந்து தெளிந்த அந்தப் பெண்ணிடம் நீ யாருமா எந்த ஊரு என்று கேட்டதற்கு பதில் கூறாமல் மது போதையில் தள்ளாடியபடி பரபரப்பான சாலையின் நடுவே நடக்க தொடங்கினார்.
Poonam Pandey: “நான் இன்னும் சாகல”..வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே.. அதிர்ந்து போன திரையுலகினர்!
அவ்வழியாக வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அந்த இளம் பெண் சாலையில் நடந்து சென்றார். ஒரு கட்டத்திற்கு மேல் மது போதை உச்சத்திற்கு சென்று நடக்க முடியாமல் சாலையில் ஓரமாக நின்றிருந்த வாகனத்தில் சாய்ந்தபடி மயங்கினார். அதன் பின்னர் மீண்டும் மயக்கம் தெளிந்த அந்த இளம் பெண் அவ்வழியாக ஒட்டன்சத்திரம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி சென்றார். பரபரப்பான சாலையில் இளம் பெண் மது அருந்திவிட்டு சாலையின் நடுவே சென்று வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்