திண்டுக்கல்: படியில் நிற்காதே உள்ளே ஏறி வா என்று சொன்ன பேருந்து நடத்துனரை சரமாரியாக தாக்கிய பள்ளி மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த கன்டக்டர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கன்டக்டர் இல்லாததால் பஸ்சை ரோட்டில் டிரைவர் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


CM Relief Fund: மிக்ஜாம்: ஒரு மாத ஊதியத்தை அள்ளிக் கொடுத்த முதலமைச்சர்: எம்.எல்.ஏ, எம்.பி.,க்களுக்கு முக்கிய உத்தரவு




திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கோடாங்கிபட்டி வழியாக காசிபாளையம் செல்லும் அரசு பேருந்து நாள்தோறும் இயங்கி வருகிறது. பேருந்தை டிரைவர் பெருமாள்(55) ஓட்டி வந்தார். கன்டக்டராக கிருஷ்ணசாமி(40) இருந்துள்ளார். இந்த பஸ்ஸில் ஏராளமானோர் ஏறினர். கூட்டமாக பஸ் வேடசந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பஸ் நிலையம் அடுத்த குடகனாறு பாலம் வந்த பொழுது படியில் தொங்கி கொண்டிருந்த ஒரு மாணவரை கன்டக்டர் கிருஷ்ணசாமி மேலே ஏறி உள்ளே வருமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் கன்டக்டர் கிருஷ்ணசாமியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.


Movie Release Today: எந்த படத்துக்கு போறீங்க? இன்று வெளியாகும் புதுப்படங்கள் லிஸ்ட் இதோ! ரஜினி கமல் மூவியும் இருக்கு!




பஸ்ஸில் கன்டக்டர் இல்லாததால் பஸ்சை இயக்க முடியாது என்று கூறி டிரைவர் பெருமாள் பஸ்சை நிறுத்திவிட்டார். தகவல் அறிந்த மாணவரின் தந்தை என் மகனை கன்டக்டர் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார் என்று கூறி, பஸ்ஸின் முன்னால் தனது மொபெட்டை நிறுத்தி கடும் தகராறில் ஈடுபட்டார். இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Kamal Hasan Pressmeet: "அரசை விமர்சிப்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.. மக்களுக்கு உதவுவதே முக்கியமானது" - கமல்ஹாசன்


தகவல் அறிந்த வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர். பின்னர் அரசு பஸ்சையும் தகராறில் ஈடுபட்ட மாணவரின் தந்தையையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அதன் பிறகு மற்ற போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். படியில் நிற்காதே என்று சொன்ன கன்டக்டரை மாணவர் தாக்கிய சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கு: சிபிஐ தரப்பின் குற்றப்பத்திரிக்கையை நிராகரித்த மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம்