தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கையெழுத்திட்ட 5 திட்டங்களில் ஒன்று, சாதாரண கட்டண நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டம். பல்வேறு விமர்சனங்களுக்கு, எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தற்போது அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல பல்வேறு பகுதிகளில் இலவச பேருந்துகளில் செல்லும் மகளிர்களுக்கு பயணம் செய்யும் பேருந்துகளில் நடத்துனர்களின் செயல்களால் சங்கடங்களும் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.


Free Bus : அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்.. திட்டத்தின் பயன்கள் என்ன..? வெளியான ஜெயரஞ்சன் அறிக்கை..




இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் கல்வார்பட்டி ஊராட்சியை சேர்ந்த கிராமம் சிங்கிலிக்காம்பட்டி. இந்த கிராமத்திற்கு அரசு பேருந்து சென்று வருகின்றது. இந்த கிராமத்திற்கு அரசு பேருந்து சென்றது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம பெண்களிடம் கேட்ட பொழுது எங்கள் ஊருக்கு வரும் அரசு பஸ் பெண்கள் ஓசி டிக்கெட் என்று பெண்களை பஸ்ஸில் ஏற்ற மறுப்பதாகவும், 


"பிரதமர் மோடியின் இரு தூண்கள்" உளவு மன்னன் அஜித் தோவல் மீண்டும் நியமனம்! பி.கே.மிஸ்ராவுக்கும் பதவி நீட்டிப்பு!




ஸ்டாப்பில் நிறுத்தாமல் தூரத்தில் நிறுத்துவதால் பெண்கள் ஓடி சென்றாலும் கண்டுகொள்ளாமல் பஸ்ஸை எடுத்து சென்று விடுவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் கர்ப்பிணி பெண் பஸ்ஸில் ஏற ஓடிய பொழுது பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டி சென்றதால் கால்தடுக்கி விட்டு கர்ப்பிணி பெண் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரின் செல்போனை பிடுங்கி பஸ் கண்டக்டர் உடைத்து விட்டதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். 




Chandrababu Naidu: ஆந்திர முதல்வராகப் பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு; 5 கோப்புகளில் அதிரடி கையெழுத்து- என்ன தெரியுமா?


இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பஸ்ஸை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது சம்பவ இடத்திற்கு வந்த கூம்பூர் சப் இன்ஸ்பெக்டர் அரசு பஸ்சை சிறை பிடித்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன் பிறகு இனிமேல் இவ்வாறு தவறுகள் நடக்காது என்று டிரைவர் கண்டக்டர்கள் வாக்குறுதி அளித்ததை அடுத்து  ஒரு மணி நேரம் கழித்து கிராம மக்கள் பேருந்தை விடுவித்தனர்.