“தேவையில்லாத ஆபாச பேச்சுகளை பேசுகிறார்” - 28 மாணவிகள் கொடுத்த புகாரால் பரபரப்பு

தேவையில்லாத ஆபாச பேச்சுகளை கல்லூரியில் பாடம் எடுக்கும் போது  பேசுவதாக 28 மாணவிகள் கையெழுத்திட்டு புகார் மனுவை துறைத் தலைவரிடம் அளித்துள்ளனர்.

Continues below advertisement

மாணவிகளிடம் ஆபாச பேச்சு, ஆசிரியைகளை புகைப்படம் எடுத்தல் போன்ற குற்றச்சாட்டின் காரணமாக வேடசந்தூர் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கௌரவ விரிவுரையாளர் அருள்செல்வம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் குணசேகரன் விளக்கம் அளித்தார்.

Continues below advertisement

Google Search 2024: கதறிய கூகுள்- மாங்காய் ஊறுகாய், ஹனுமன், ஹர்திக் என தேடி திரிந்த இந்தியர்கள் - பிரதமர் மோடி எங்கப்பா?


திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த தண்ணீர் பந்தம்பட்டியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி முதல்வர் கீதா, கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த கல்லூரியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் கெளரவ விரிவுரையாளராக பொள்ளாச்சியைச் சேர்ந்த அருள் செல்வம் பணிபுரிந்து வந்தார். இவர் உடை, ஆடை மற்றும் அணிகலன்கள் குறித்து பாலியல் தொந்தரவு செய்யும் வகையில் பேசியதாக 3ஆம் ஆண்டு மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, தேவையில்லா ஆபாச பேச்சுகளை கல்லூரியில் பாடம் எடுக்கும் போது  பேசுவதாக 28 மாணவிகள் கையெழுத்திட்டு மற்றொரு புகார் மனுவையும் துறைத் தலைவரிடம் அளித்துள்ளனர்.

"எங்களுக்கும் அதானிக்கும் தொடர்பு இல்ல" அடித்து சொன்ன துணை முதல்வர் உதயநிதி!


மாணவிகள் புகார் அளித்து 2 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் மாணவிகளையும், பெண் பேராசிரியர்களையும் அருள்செல்வம் புகைப்படம் எடுத்ததாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் பணியாளர்கள் ஒன்றிணைந்து, காவல் துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிக்கு தகவல் அளித்தனர். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அருள்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், முதல்வரின் தனிப் பிரிவு, மாவட்ட நிர்வாகம், மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ஆகியோருக்கும் புகார் மனு அளித்தனர்.

இதனை அடுத்து, மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் குணசேகரன், புகார் அளித்த மாணவிகள், பெண் பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை  நடத்தினார்.  அதில், மாணவிகள், மாணவர்கள், பெண் பணியாளர்கள் என அனைவரும் கெளரவ விரிவுரையாளர் அருள்செல்வம் மீதான புகார்களை உறுதிப்படுத்தினர். இந்த விசாரணை நேற்று இரவு 7.30 மணி வரை நீடித்தது. விசாரணையின் முடிவில் கல்லூரியின் முதல்வர் (பொ) கீதா, பாலியல் புகாரில் சிக்கிய கெளரவ விரிவுரையாளர் அருள்செல்வத்தை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

School Leave: மாணவர்களே..! ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு


இதுகுறித்து மதுரை மண்டல கல்லூரி இணை இயக்குனரிடம் குணசேகரன் இடம் விளக்கம் கேட்டபோது,"குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கௌரவ விரிவுரையாளர் அருள்செல்வம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் அரசு கலை கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது,"புகார் அளித்த மாணவிகள் கௌரவ விரிவுரையாளர் அருள் செல்வம் கல்லூரியில் இருந்து நீக்கினால் போதுமானது என தெரிவித்ததன் அடிப்படையில் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. மேலும் கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்" என தெரிவித்தனர்.

Continues below advertisement