Google Search 2024: கதறிய கூகுள்- மாங்காய் ஊறுகாய், ஹனுமன், ஹர்திக் என தேடி திரிந்த இந்தியர்கள் - பிரதமர் மோடி எங்கப்பா?

Google Search 2024: நடப்பாண்டில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியதை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continues below advertisement

Google Search 2024: நடப்பாண்டில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியதை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள், ஒவ்வொரு பிரிவாக கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கூகுள் தேடல் 2024:

கூகுள் உலகின் மிகப்பெரிய தேடுபொருள் அமைப்பாகும். நமக்கு தெரியாத, அறிந்த கொள்ள நினைக்கும் எந்த கேள்விக்கும் இதில் விடை கிடைக்கும். ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்கள், நாள் ஒன்றிற்கு ஒருமுறையாவது கூகுள் உதவியை நாடாமல் இருப்பது என்பது சாத்தியமற்றது. அந்த அளவிற்கு நமது வாழ்வின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே, கூகுள் ஒரு பெரிய வணிக அமைப்பாகும் திகழ்கிறது. இந்நிலையில், நடப்பாண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள், விளையாட்டு, சினிமா மற்றும் உணவு பொருட்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியர்கள் மொத்தமாக கூகுளில் அதிகம் தேடியது என்ன?

  1. இந்தியன் பிரீமியர் லீக்
  2. T20 உலகக் கோப்பை
  3. பாரதிய ஜனதா கட்சி
  4. தேர்தல் முடிவுகள் 2024
  5. ஒலிம்பிக்ஸ் 2024
  6. அதிகப்படியான வெப்பம்
  7. ரத்தன் டாடா
  8. இந்திய தேசிய காங்கிரஸ்
  9. ப்ரோ கபாடி லீக்
  10. இந்தியன் சூப்பர் லீக்

இந்தியர்கள் அதிகம் தேடிய திரைப்படங்கள்:

  1. ஸ்திரீ 2
  2. கல்கி 2898 AD
  3. 12th ஃபெயில்
  4. லபாடா லேடீஸ்
  5. ஹனுமன்
  6. மஹாராஜா
  7. மஞ்சும்மல் பாய்ஸ்
  8. தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம்
  9. சலார்
  10. ஆவேஷம்

அதிகம் தேடப்பட்ட வெப்சீரிஸ்கள்:

  1. ஹீராமண்டி
  2. மிர்சாபூர்
  3. லாஸ்ட் ஆஃப் அஸ்
  4. பிக்பாஸ் 17
  5. பஞ்சாயத்
  6. க்வீன் ஆஃப் டியர்ஸ்
  7. மேரி மை ஹஸ்பண்ட்
  8. கோடா ஃபேக்டரி
  9. பிக்பாஸ் 18
  10. 3 பாடி பிராப்ளம்

விளையாட்டு நிகழ்வுகள்

  1. இந்தியன் பிரீமியர் லீக்
  2. டி20 உலகக் கோப்பை
  3. ஒலிம்பிக்ஸ் 2024
  4. ப்ரோ கபடி லீக்
  5. இந்தியன் சூப்பர் லீக்
  6. மகளிர் பிரீமியர் லீக்
  7. கோபா அமெரிக்கா
  8. துலீப் கோப்பை
  9. யூரோப்பியன் கால்பந்து சாம்பியன்
  10. 19-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை

அதிகம் தேடப்பட்ட தனிநபர்கள்:

  1. வினேஷ் போகத்
  2. நிதிஷ் குமார்
  3. சிராக் பஷ்வான்
  4. ஹர்திக் பாண்ட்யா
  5. பவன் கல்யாண்
  6. ஷஷாங்க் சிங்
  7. பூனம் பாண்டே
  8. ராதிகா மெர்ச்சண்ட்
  9. அபிஷேக் சர்மா
  10. லக்‌ஷயா சென்

பயணத்திற்கான இடங்கள்:

  1. அஜெர்பைஜான்
  2. பாலி
  3. மணலி
  4. கஜகஸ்தான்
  5. ஜெய்பூர்

அதிகம் தேடப்பட்ட உணவுகள்

  1. பார்ன் ஸ்டார் மார்டினி
  2. மாங்காய் ஊறுகாய்
  3. தனியா பஞ்சரி
  4. உகாதி பச்சடி
  5. சர்னாம்ரிட்
  6. எமா தட்சி
  7. ஃபிளாட் வைட்
  8. கஞ்சி
  9. ஷங்கர்பலி
  10. சம்மந்தி

அருகாமையில் உள்ள இடங்கள் (Near Me):

  1. எனது அருகில் காற்றின் தரம்
  2. எனது அருகில் ஓனம் சத்யா உணவு
  3. எனது அருகில் ராமர் கோயில்
  4. எனது அருகில் ஸ்போர்ட்ஸ் பார்
  5. எனது அருகில் சிறந்த பேக்கரி
Continues below advertisement