ஒவ்வொரு பண்டிகைகளும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. அதிகாலை எழுந்து, புத்தாடைகள் உடுத்தி விதவிதமான இனிப்பு வகைகளுடன் பட்டாசுகள் வெடித்து மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் தீபாவளி திருநாளில் அசைவ உணவிற்கும் பஞ்சம் இருக்காது. பெரும்பாலான திருவிழாக்களில் அசைவ உணவுகளே அதிகளவில் இடம்பெற்று வருகிறது. இதனால் ஆடு , கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகள் அதிகளவில் அன்று விற்பனையாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனை கருத்தில் கொண்டு அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்பாடி அருகே என்ஜின் இல்லாமல் வழியில் நின்ற பயணிகள் ரயில்; சீரமைப்பு பணி தீவிரம்!
திண்டுக்கல் மாவட்டத்திலேயே அய்யலூர் சந்தையில் தான் அதிக அளவில் ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆடி மாதம் என்பதால் கிராம பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வரும் 31-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று அய்யலூரில் ஆட்டுச் சந்தை கூடியது. அதிகாலை 2 மணி முதலே ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் சந்தையில் குவிந்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. சந்தைக்குள் இடம் இல்லாததால் சந்தைக்கு வெளியே சாலை வரை கூட்டம் அலைமோதியது. மேலும் ஆடுகளின் விலையும் அதிகரித்த போதிலும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடு மற்றும் கோழிகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
10 கிலோ எடையுள்ள வெள்ளாடு 8500 ரூபாய் வரையிலும், செம்மறி ஆடு 7000 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூபாய் 450 வரையிலும், சண்டைக்கு பயன்படும் கட்டு சேவல் அதிகபட்சமாக 15,000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகள் சேவல்களை சண்டையிட வைத்து வாங்கி சென்றனர். அய்யலூர் சந்தையில் இன்று ஒரே நாளில் மட்டும் 3 கோடி ரூபாய்க்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடு மற்றும் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.