மதுரையில் திடீரென மழை பெய்து வருகிற சூழலை மோசமான வானிலை காரணமாக இரண்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.











மதுரையில் நேற்றிரவு பலத்தை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் சென்னையிலிருந்து 7 மணிக்கு கிளம்பி 8:20க்கு மதுரையில் தரையிறங்க வேண்டிய இண்டிகோ விமானமும், பெங்களூரிலிருந்து 7: 20க்கு புறப்பட்டு மதுரையில் 8:35 மணிக்கு தரை இறங்க வேண்டிய விமானமும் மோசமான வானிலை காரணமாக கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேலாக மதுரையை சுற்றி வானில் வட்டமடித்துக் கொண்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது. 'டானா' புயல் காரணமாக அதிகமாக காற்று வீசுவதாலும், மேகமூட்டம் மற்றும் மழைப்பொழிவு காரணமாக தரையிறக்க முடியாததால் தேனி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி பகுதியில் வானில் வட்டம் அடைத்து கொண்டிருந்தது.


- Southern Railway: சென்னை - ராமநாதபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு


2 விமானங்களும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது


இந்நிலையில் மதுரை வரவேண்டிய இரண்டு விமானங்களும் வானில் வட்டமடைந்து கொண்டிருப்பதால் விமானத்தில் பயணிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் நிலை என்ன என்பது குறித்து விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானிகளுக்கு தொடர்ச்சியாக அதிகாரிகள் கேட்டு அறிந்துகொண்டனர். மேலும், விமானத்தில் போதுமான எரிபொருள்கள் உள்ளதா.? என்பது குறித்தும் அதிகாரிகள் விமானிகளிடம் கேட்டு அறிந்து கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வானிலை சீரான நிலையில் விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படி 2 விமானங்களும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.



இரண்டு இன்டிகோ விமானங்களும் சென்னை, பெங்களூர் புறப்பட்டு சென்றது.



மதுரை விமான நிலையத்தில் 40 நிமிடம் தாமதமாக தரையிறங்கிய இன்டிகோ பெங்களூர் விமானம் மதுரையில் இருந்து 55 பயணிகளுடன் 9:48 மணியளவில் பெங்களூரு புறப்பட்டு சென்றது. இதேபோல் சென்னையில் இருந்து மதுரை வந்த  இன்டிகோ விமானம் மதுரையில் இருந்து 76 பயணிகளுடன் 9:55 மணியவில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. கனமழை எதிரொளியால் மதுரை விமான நிலையத்தில் பெங்களூரு, சென்னை  இண்டிகோ  விமானங்கள் 40 நிமிடம் தாமதமாக தரையிறங்கியது. இதனால் மதுரை விமான நிலையம் வளாகத்தில் பெரும் பரப்பான சூழ்நிலை காணப்பட்டது. நேற்று இரவு இரண்டு இண்டிகோ விமானங்களும் பத்திரமாக தரை இறங்கியது. மீண்டும் பயணிகளுடன் இரண்டு இன்டிகோ விமானங்களும் சென்னை, பெங்களூர் புறப்பட்டு சென்றது.