காட்பாடி அருகே சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயிலின் என்ஜின் தனியே கழன்று சென்றது; ரயில் பெட்டிகள் வழியில் நின்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில் வேலூர் காட்பாடி அருகே சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் முகுந்தராயுரம்- திருவலம் இடையே சென்றுகொண்டிருக்கையில், தீடிரென எதிர்பாராவிதமாக என்ஜின் மற்றும் ரயில் பெட்டிகளுக்கு இடையே கப்லிங் கழன்றுள்ளது. இதனால் ரயிலின் என்ஜின் மட்டுமே தனியே கழன்று சென்று விட்டது. பயணிகள் ரயில் பெட்டிகள் மட்டும் தண்டவாளத்தில் தனியே நின்றது. இது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.பயணிகளுடன் ரயில் பெட்டிகள் நடுவழியில் தண்டவாளித்தில் இருப்பதை பாதுகாப்பாக சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான காரணம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் ஏதும் தெரிவிக்கவில்லை. பயணித்தின் நடுவே என்ஜின் மட்டும் தனியே கழன்று சென்று குறித்து பயணிகள் தங்களது பாதுகாப்பு பயணம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில் விபத்துகள் குறித்த செய்திகள் அடிக்கடி கிடைக்கிறது. ரயில் தடம் புரள்வது உள்ளிட்ட பல ரயில் விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதை காண முடிகிறது. இதற்கு ரயில்வே துறை நடவடிக்கை எடுக்குமா என்பது பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.