திண்டுக்கல்: நத்தம் அருகே சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் போலீஸ் பாதுகாப்புடன் புரவி எடுத்துச் சென்று குலுப்பையில் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறை ஊராட்சியில் உள்ளது களத்துப்பட்டி, கோவில்பட்டி கிராமங்களாகும். இங்குள்ள முடிமலை ஆண்டவர் சுவாமி கோயில் புரவி எடுப்பு திருவிழாவை களத்துப்பட்டி கிராம மக்கள் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி கொண்டாடினர். இந்நிலையில் கோவில்பட்டி கிராம மக்கள் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 7ந் தேதி திருவிழா கொண்டாட தயாராகினர். இந்நிலையில் புரவிகள் செய்யப்பட்டு தயாராக இருந்து வந்த நிலையில் கோயில் பூசாரிகளாக களத்துப்பட்டியைச் சேர்ந்தவர்கள் தான் செயல்படுவோம் என்றனர். இதற்கு கோவில்பட்டி கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் களத்துப்பட்டி கிராமத்தினர் திரண்டனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரிடமும் தாசில்தார் ராமையா, போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி உள்ளிட்ட அதிகாரிகள் சமரசம் பேசினர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனும் பேச்சு வார்த்தை நடத்தினார். உடன்பாடு ஏற்படவில்லை. இதையறிந்த களத்துப்பட்டி கிராமத்தினர் குழந்தைகளுடன் வந்து திரண்டு இதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சமரசப் பேச்சை தொடர்ந்து கோவில்பட்டியில் வைத்து அனைத்து பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்து புரவி எடுப்பை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
Nayanthara : ”லேடி சூப்பர் ஸ்டார்னு சொன்னா திட்றாங்க” : பேட்டியில் நயன்தாரா சொன்னது என்ன?
ஒரு குறிப்பிட்ட தூரத்தில் புரவி எடுத்துச் சென்ற பக்தர்கள் தவிர மற்றவர்களுக்கு போலீஸார் அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் மலையடிவாரத்தில் உள்ள குழுப்பை என்னும் இடத்தில் குதிரை சிலைகளை கொண்டு சென்ற பக்தர்கள் இறக்கி வைத்து விட்டு திரும்பினர். இதையடுத்து ஒரு வழியாக எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக கிராம மக்களை அமைதிப்படுத்தி திருவிழாவினை நடத்தி வைத்த அரசு அதிகாரிகள், காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.