பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Tamil 7) நிகழ்ச்சி 68ஆவது நாளைக் கடந்து ஜெட் வேகத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. முந்தைய சீசன்களை எல்லாம் தாண்டி இந்த சீசனில் திட்டம் வகுத்து கேம் பிளான் செய்யும் ஆயுதத்தை ஏகமனதாக போட்டியாளர்கள் கையில் எடுக்க, தடுக்கி விழுந்தால் சண்டை, இருமினால் அடிதடி என சென்று கொண்டிருக்கிறது.
கோல்ட் ஸ்டார் டாஸ்க்
இந்நிலையில், நேற்றைய போட்டியில் 5 கோல்ட் ஸ்டார்களை ஒரே நேரத்தில் கைப்பற்றும் சர்ப்ரைஸ் வாய்ப்பினை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கினார். 5 ஸ்டார்களுடன் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம், நேரடியாக ஒருவரை நாமினேட் செய்யலாம் என்பன போன்ற கூடுதல் சலுகைகளும் வழங்கப்பட போட்டி பரபரத்தது.
மாயா, பூர்ணிமா, கூல் சுரேஷ், விஷ்ணு, விஜய் வர்மா, விக்ரம், அர்ச்சனா, தினேஷ், நிக்சன், விசித்ரா, தினேஷ், அனன்யா, மணி, ரவீனா என வீட்டின் அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களும் களமிறங்க பெரும் வாக்குவாதங்கள், வார்த்தைப் போர், தங்கள் தரப்பு நியாயங்கள் ஆகியவற்றைக் கடந்து ஒரு ஒருவராக கேமை விட்டு வெளியேறினர்.
விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் சரவண விக்ரம்
இரண்டாவது வாரத்தில் வெளியேறிய விஜய் வர்மா, முன்னதாக வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டுக்குள் இரண்டாவது வாய்ப்ப்பு பெற்று உள்ளே வர அவரது விளையாட்டின் மேல் பெரும் எதிர்பார்ப்புகள் உண்டாகின. அவரும் ரசிகர்களை ஏமாற்றாமல் ஸ்மார்ட் கேம் ஆடி வரும் நிலையில், நேற்றைய ஆட்டத்தில் எல்லாரும் எதிர்பார்த்தது போல் இறுதிவரை வந்தார். ஆனால் இதில் ஆச்சர்யப்படுத்தியது விக்ரம்.
பிக்பாஸ் போட்டி தொடங்கியது முதலே செட் ப்ராப்பர்டி, வீட்டில் வெட்டியாக இருக்கிறார் என்றெல்லாம் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் சரவண விக்ரம், தற்போது பத்தாவது வாரத்தில் நின்று ஆச்சர்யப்படுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், நேற்றைய டாஸ்க்கில் 5 கோல்ட் ஸ்டார்களையும் விஜய் விட்டுக்கொடுக்க ஜெயித்தார்.
பிக்பாஸில் இந்த சீசனில் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் விக்ரம், நேற்றைய ஆட்டத்தில் 5 கோல்ட் ஸ்டார்களைக் கைப்பற்றுவார் என சக போட்டியாளர்கள், ரசிகர்கள், ஏன் வீட்டில் இருக்கும் அவரது நண்பர்கள் மாயா - பூர்ணிமா உள்பட யாருமே நினைக்கவில்லை.
கமலிடம் வருந்திய விக்ரம்
விஜய் தொடக்கம் முதலே ஸ்மார்ட் மூவ் செய்து பிற போட்டியாளர்களை ஸ்கெட்ச் போட்டு அதிரடியாக வெளியேற்றிய நிலையில், விக்ரம் வழக்கம்போல் அர்ச்சனாவுக்கு எதிராக மட்டுமே குரல் கொடுத்தார்.
தன்னை இவ்வளவு கிண்டல், கேலி செய்வது வலிக்கிறது என நேரடியாக அர்ச்சனாவிடம் முதன்முறையாக விளக்கிய விக்ரம், இறுதியாக விஜய் வர்மாவிடம் தான் ஏன் ஸ்டார்களுக்கு தகுதியானவர் என்றும் விவாதித்தார். விக்ரம் விஜய்யிடம் பெரிதாக போராடாத நிலையில், என்ன நினைத்தாரோ என்னவோ.. விஜய், விக்ரமுக்கு விட்டுக் கொடுத்து அட சொல்ல வைத்தார்.
சென்ற வாரம் கமல்ஹாசன் முன்னிலையில் இங்கு திறமைக்கு ஸ்டார் கிடைக்கவில்லை, தன்னால் முதல் வாரம் முதல் முயன்றும் ஸ்டார் வாங்க முடியவில்லை என விக்ரம் கவலையுடன் பகிர்ந்து கொண்ட நிலையில், இந்த வார முடிவில் அவருக்கு 5 ஸ்டார்கள் கிடைத்துள்ளன.
விவேகானந்தர் பாதையில் விக்ரம்..
இந்நிலையில், இரவு நேரங்களில் ‘டைட்டில் வின்னர்’, “பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் சரவண விக்ரம்” என்றெல்லாம் அவர் எடுத்து வந்த affirmationகள் வேலை செய்யத் தொடங்கி விட்டதாக ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் விவேகானந்தரின் “நான் எதையும் சாதிக்கக்கூடியவன் என சொல்.. நீ உறுதியிடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்று ஆகிவிடும்” எனும் வார்த்தைகளைப் போல், தன் நம்பிக்கை, மற்றும் வார்த்தைகளாலேயே விக்ரம் இந்த ஸ்டார்களை பெற்றுள்ளார்.. இப்படியே போனால் டைட்டில் வின்னராகக் கூட அவர் ஆகலாம் என ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் 5 ஸ்டார் விளம்பரத்தைப் போல் எதுவும் செய்யாமல் ஐந்து ஸ்டார்களை விக்ரம் ஜெயித்துவிட்டார் என்றும் நெட்டின்சகள் மீண்டும் ட்ரோல் செய்து வருகின்றனர்.