Nayanthara: ஒரு பெண்ணாக இருப்பதால் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் திட்டுகிறார்கள் என நயன்தாரா கூறியுள்ளார். 

 

நயன்தாரா மற்றும் ஜெய் நடிப்பில் வெளிவந்துள்ள அன்னபூரணி படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் அன்னபூரணி படம் குறித்தும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நயன்தாரா கலகலப்பாக பேசியுள்ளார்.

 

இது தொடர்பாக நயன்தாரா அளித்துள்ள நேர்க்காணலில், "சினிமாவுக்கு வந்தபோது எனக்கு எப்படி நடக்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும், கேமரா முன்பு எப்படி நிக்கணும் என்று கூட தெரியாது. ஆனால், எனக்கு தேவையானது எல்லாவற்றையும் கற்று கொண்டுள்ளேன். நிறைய உழைத்துள்ளேன். அதனால்தான் நான் இப்போ இந்த இடத்தில் உள்ளேன். கடினமான உழைப்பையே நான் நம்புகிறேன். ஒருவருக்கு டேலண்ட் இருக்கோ இல்லையோ ஆனால், கடினமான உழைப்பும், உண்மையாக இருப்பதுமே ஒருவரை மேலே கொண்டு செல்லும். 

 

நீங்கள் அழகா இருக்கிறீர்களோ இல்லையோ, பணம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் உங்களிடம் உழைப்பு இருந்தால் மட்டுமே மேலே செல்லலாம். அந்த உழைப்புதான் எனது படங்களில் உள்ளது. அன்னபூரணி படத்தில் என்னை நானே 95 சதவீதம் பார்த்துள்ளேன். அன்னபூரணி என்னை தான் பிரதிபலிக்கிறது. விக்கிக்கு கேக் ரொம்ப பிடிக்கும். அவருக்கு பிடித்த கேக் செய்ய கத்துக்கிட்டு அதை செய்தேன். ராஜா ராணியில் ஜெய் கூட நடித்த ஃபீலிங் அன்னப்பூரணி படத்திலும் இருந்தது. ராஜா ராணி படத்துக்கு பிறகு 10 ஆண்டுகளாக ஜெய் கூட பேசவில்லை. இந்த படத்துக்காகத்தான் இப்போது பேசியுள்ளேன். ஆனால், நாங்கள்  ஷூட்டிங்கில் நன்றாக பேசி வேலை பார்த்தோம். 

 

லேடி சூப்பர் ஸ்டார்னு சொன்னா திட்டறாங்க. நான் பெண்ணா இருக்கறதாலையா இல்லை நான் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறாங்களா? என்று தெரியவில்லை. ஆனால், லேடி சூப்பர் ஸ்டார் என்று யாராவது சொன்னால் 10 பேர் பாராட்டினாலும், 50 பேர் திட்றாங்க. அதனால் தான் அன்னபூரணி படத்தில் எனக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று போட வேண்டாம் என்றேன். ஆனால், எனக்கே தெரியாமல் என் பெயரை லேடி சூப்பர் ஸ்டார் என போட்டுள்ளனர். 

 

சத்யராஜ் சார் கூட நடிக்கும்போது, எப்படி அவர் இப்படி நடிக்கிறார் என்று தோணும். நான் நடிக்கும் படத்தில் சத்யராஜ் சார் எப்பொழுதும் ஓகே சொல்லி இருக்கிறார். சினிமாவில் எப்பொழுதும் எனக்கு அப்பா என்று கூற நினைத்தால் அது சத்யராஜ் சார்தான். 

 

எனக்கும் ஜெய்க்கும் அழகான பிரண்ட்ஷிப் உள்ளது. அதிகமாக மெசேஜ் பண்ணிக்க மாட்டோம். செல்போனில் பேசிக்க மாட்டோம். ஆனால், எங்களுக்கு நல்ல நட்பு உள்ளது” என்றார். மேலும் ”சினிமாவுக்காக கடினமாக உழைத்துள்ளதாகவும், எதற்காகவும் யாருக்காகவும் தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்கவில்லை” என்றும் கூறியுள்ளார்.