கோடை மழையால் இன்று நடக்கவிருந்த படகு போட்டி வரும் 25ம் தேதிக்கு மாற்றம்


கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாகவும் மழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாகவும் கோடை விழாவில் முக்கிய விழாவாக இன்று நடைபெற இருந்த  படகு போட்டி  ரத்து செய்யப்பட்டு வருகின்ற 25/05/2024 அன்று நடைபெறும் என்று சுற்றுலாத்துறையினர் அறிவித்துள்ளனர்.




திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சியுடன் கோடை விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. இதனைத் தொடர்ந்து மலர்க்கண்காட்சியுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து கொடைக்கானலில் அவ்வப்போது மிதமான மழை முதல் கனமழையும் பெய்து வருகிறது. இந்த சூழலில் இன்று நடக்கவிருந்த கோடை விழாவின் முக்கிய அங்கமாக இருக்கும் படகு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த படகு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வரும் 25ஆம் தேதி நடைபெறும் எனவும் சுற்றுலாத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் பிரையன்ட் பூங்காவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அனுமதியின்றி நடந்த ரேக்ளா பந்தயம் - போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதி


திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்கள் என 14 நாட்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். இதன்படி இன்று வைகாசி மாதம் ஏழாம் நாளான கடைசி கிரிவலத்தை முன்னிட்டு பழனி, உடுமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டியில் பழனி கோவிலுக்கு கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்று வழிபாடு முடித்து விட்டு மீண்டும் ஊர்களுக்கு திரும்பினர். அப்போது பழனி-உடுமலை நெடுஞ்சாலையில் உள்ள ஆர். வாடிப்பட்டி அருகே ரேக்ளா வண்டிகள் சென்றபோது அவர்களுக்குள் திடீரென  பந்தயம் நடத்தினர். 


Youtuber Irfan: பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் பற்றி பதிவு.. யூட்யூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை!




Rajiv Gandhi Death Anniversary: 33வது நினைவு தினம்..! அப்பா ராஜிவ் காந்தி குறித்து ராகுல் நெகிழ்ச்சி


திடீரென நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயத்தால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். எதிரே வரும் வாகனங்களை கருத்தில் கொள்ளாமல் அதிவேகமாக மாட்டு வண்டிகளை அடித்து விரட்டி ஓட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பழனி கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவது தவறல்ல. ஆனால் போட்டி போட்டு பந்தயம் நடத்தும் வகையில் வேகமாக செல்வது தவறு என்று எச்சரித்தனர்.  வருவாய்த்துறை,  காவல்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறைகளிடம் உரிய அனுமதியின்றி  ரேக்ளா பந்தயம் நடத்தியது குறித்து  அதிகாரிகள் விசாரணை நடத்தியதை தொடர்ந்து சாலையில் அனைவரும் கலைந்து சென்றனர். எவ்வித முன்னெச்சரிக்கை பணிகளும் மேற்கொள்ளாமல் பழனி-உடுமலை சாலையில் வாகனங்கள் சென்றுவரும் நிலையில் கோவலுக்கு வந்த பக்தர்கள் ரேக்ளா பந்தயம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.