எல்லா நாட்களிலும் நாம் இறைவனை வழிபடுவோம் என்றாலும், இறைவனை வழிபடுவதற்காகவே நம் முன்னோர்கள், சில மாதங்களை வரையறை செய்து வைத்துள்ளனர். அதில் ஆடி, புரட்டாசி இருக்கிறது. பெருமாள் மட்டுமின்றி, அம்மனுக்குரிய நவராத்திரி விரத நாட்களும், புரட்டாசி மாதம் தான் வருகிறது. அதோடு முன்னோர்களை வழிபடும் 'மகாளய அமாவாசை', சிவபெருமான அருளை பெற்றுத் தரும் 'கேதார கவுரி விரதம்' என்று அனைத்து தெய்வங்களுக்குமான வழிபாட்டு மாதமாக இந்த புரட்டாசி மாதம் இருக்கிறது. இதனால் விரத வழிபாடுகளுக்காக இந்த மாதம் அசைவத்திலிருந்து பெரும்பாலானோர் தள்ளியே இருப்பர்.


அதன் எதிரொலியே  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் வாரம்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர். பொதுவாக வியாழக்கிழமை தோறும் நடைபெறும் அய்யலூர் ஆட்டுச் சந்தையில்  50 முதல் 60 லட்சம் ரூபாய் வரை ஆடு மற்றும் கோழி வர்த்தகம் நடைபெறும்.


“I AM WAITING” திருச்சி எஸ்.பி. வருண்குமார் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் – என்ன சம்பவம்..?




தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத் மற்றும் ஆடி மாதங்களில் நடைபெறும் வாரச்சந்தையில் வர்த்தகம் பல கோடி ரூபாயை தாண்டும். விவசாயிகள் வியாபாரிகள் சந்தையில் இடமில்லாமல் திருச்சி முதல் திண்டுக்கல் அய்யலூர் புறவழிச்சாலையில் நின்று வியாபாரம் பார்க்கும் அளவிற்கு கூட்ட நெரிசல் காணப்படும். இந்த நிலையில் இன்று அதிகாலை  சந்தை கூடியது. புரட்டாசி மாதம் என்பதால்  வழக்கத்தைக் காட்டிலும் விவசாயிகளும் வியாபாரிகளும் மிகவும் குறைவாக வந்திருந்தனர்.




பொதுவாக புரட்டாசி மாதம் பொதுமக்கள் பலர் மாதம் முழுவதும் சைவ உணவை உண்டு விரதம் இருந்து வருகின்றனர். இதனால் இறைச்சி கடைகள் பல கடைகள் செயல்படாமல் உள்ளது. ஆகையால் வியாபாரிகள் ஆடுகளை வாங்க முன்வரவில்லை. இதனால் அய்யலூர் ஆட்டுச் சந்தை வெறிச்சோடி களை இழந்து  காணப்பட்டது.


காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் முன்னணி நிறுவனங்கள்.. வேலைவாய்ப்பு முகாம் பற்றி தெரியுமா ?


இன்று நடந்த அய்யலூர் ஆடு மற்றும் கோழி சந்தையில் 20 லட்சத்திலிருந்து 25 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்றிருக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் வழக்கத்தைக் காட்டிலும் பாதி அளவு கூட வர்த்தகம் நடைபெறவில்லை என விவசாயிகள் கவலை அடைந்தனர். இன்று நடைபெற்ற அய்யலூர் ஆட்டுச் சந்தையில் 10 கிலோ எடை கொண்ட  செம்மறியாடு 5500 இல் இருந்து 6000 ரூபாய்க்கும், 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு 6500 இல் இருந்து 7000 ரூபாய்க்கும் விற்பனையானது.