கேரள மாநிலம் மலப்புரத்தில் 'நிபா' வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 9-ந்தேதி 24 வயது வாலிபர் உயிரிழந்தார். இதனால், கேரளாவில் 'நிபா'வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் பணியில் அம்மாநில சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.




இதன்படி 'நிபா' வைரஸ் பாதிப்பு அறிகுறிகளாக கடுமையான தலைவலி, காய்ச்சல், உடல் வலி என நோய் பாதிப்பு அறிகுறிகளுடன் யாரேனும் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.


காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் முன்னணி நிறுவனங்கள்.. வேலைவாய்ப்பு முகாம் பற்றி தெரியுமா ?




இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், தமிழக கேரளாவை ஒட்டி யுள்ள  இடுக்கி மாவட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருக்கிறதா? எனக் கண்காணிக்க வேண்டும்.


குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கண்கா ணிப்பை தீவிரப்படுத்தப்பட்டு 6 மாவட் டங்களின் எல்லைகளில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி சுகாதார அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் தீவிரமாக பரிசோதனை செய்து தமிழக பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்ட நிலையில்,


Walkie Talkies Blast: நேற்று பேஜர், இன்று அடுத்தடுத்து வெடித்த வாக்கி-டாக்கீஸ், 14 பேர் பலி, 300 பேர் காயம் - பதற்றத்தில் லெபனான்




தேனி மாவட்டத்திலிருந்து கேரளா பகுதிக்கு குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய வழியாக வாகனங்களில் வரும் பொது மக்களையும் பயணிகளையும் தீவிரமாக பரிசோதனை செய்த பின்  அனுமதித்து வருகின்றனர். போடிமெட்டு வழியாக கேரளா செல்லும் முந்தல் சோதனை சாவடி அருகே பொது சுகாதாரத் துறை சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு போடிமெட்டு வழியாக போடிக்கு வரும் பயணிகளையும் பொதுமக்களையும் காய்ச்சல் அறிகுறிகள் இருக்கிறதா என சோதனை செய்து வருகின்றனர்.


IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?


மேலும் வாகனங்களுக்குநோய் தடுப்பு மருந்துகளை தேய்த்தபின் உள்ளே நுழைய அனுமதித்து வருகின்றன. மருத்துவமுகாம் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  இங்கு முகாமில் பணி புரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதாரத் துறை அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.