திண்டுக்கல் ஆர்.எஸ். சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பல ஆயிரக்கணக்கான வங்கிக்கணக்கு வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வழக்கம்போல் நேற்று பணிகள் செயல்பட்டு வந்த நிலையில் மாலை வங்கி பணிகளை முடித்துவிட்டு வங்கியில் பணி செய்யும் ஊழியர்கள் தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர். அதிகாலை நான்கு மணி அளவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து புகைமண்டலம் வெளியேறி உள்ளது.  இதை அறிந்த பக்கத்து வணிக வளாகத்தில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

Continues below advertisement


Haryana CM: ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா - அமைச்சரவை கூண்டோடு கலைப்பு




அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், இரண்டு தீயணைப்பு வாகன வண்டியில் 10க்கும்  மேற்பட்ட ஊழியர்கள் வந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் எரிந்துகொண்டிருந்த பல லட்சம் மதிப்பிலான கணினிகள், மேஜைகள், பணம் கட்டும் கவுன்டர்கள் ஆகியவைகளை துரிதமாக தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.


திருமண ஊர்வலத்தில் நடந்த சோகம்! லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி!




திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு: யாருக்கு எங்கே? வெளியான அறிவிப்பு


வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தக்கூடிய அறை முழுவதும் முற்றிலும் தீப்பிடித்து எரிந்ததில் சேதம் அடைந்தது. மேலும் தீ அதிக அளவு பரவியதால் சேமிப்பு அறையில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகள் அதிர்ஷ்டவசமாக தப்பியது. RS சாலையில் பிரதான வங்கியாக செயல்பட்டு வரக்கூடிய இந்திய ஓவர் சிஸ் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.