தமிழகத்தில் மிகவும் பிரபலமாகவும் முக்கியத்துவமாக பார்க்கப்படும் மார்க்கெட்டாக, ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் திகழ்கிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் இங்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதேபோல் கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.


Diwali Special Show: அசத்தலாக களைகட்டும் தீபாவளி..தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி....!




மேலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெங்காய விற்பனை களை கட்டுவது வழக்கம். தினமும் சராசரியாக, 3 ஆயிரம் டன் சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிகரித்தன் காரணமாக, கடந்த 6 மாதங்களாக, சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்தது. அதன்படி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.10 முதல் ரூ.15-க்கு விற்பனையானது.


Gotabaya Rajapaksa : மனித உரிமை மீறல் வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சம்மன்..




இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் பிற பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இதேபோல் திருச்சி, நாமக்கல், ராசிபுரம், கரூர், ராஜபாளையம், தேனி ஆகிய பகுதிகளிலும் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடவில்லை. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து விட்டது. இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.


Diwali Guidelines: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப் போறீங்களா...? காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகள் இதுதான்!


அதன்படி ஒரு கிேலா சின்ன வெங்காயம் ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறைக்கு ஒரு கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து, தோட்டங்களில் பட்டறை அமைத்து இருப்பு வைத்திருந்த விவசாயிகள் இந்த விலை உயர்வால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




பண்டிகை கால பலகாரங்களில் பிரச்சனையா? புகாரை தொலைபேசியில் தெரிவிக்கலாம் - கரூர் கலெக்டர்


அதேநேரத்தில், ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணி நடந்து வருகிறது. தற்போது பெய்து வரும் தொடர்மழையினால் சின்ன வெங்காயம் அழுகும் நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி அறுவடை செய்த வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை. பழைய வெங்காயத்தை வாங்குவதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என்றும், தீபாவளி பண்டிகை முடியும் வரை விலை குறைய வாய்ப்பில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண