அரசு மருத்துவமனையில் மாத்திரை, மருந்துகள் தட்டுப்பாடு; மருத்துவர்கள் அலட்சியத்தால் மக்கள் ஆவேசம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாத்திரை , மருந்துகள் தட்டுப்பாடு. மருத்துவமனைக்கு வரக்கூடிய நிதிகள் முழுமையாக பயன்படுத்தவில்லை என புகார்.

Continues below advertisement

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாத்திரை மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு, தனியார் மருந்தகங்களில் மாத்திரை, மருந்துகள் வாங்கி வர மருத்துவர்கள் வலியுறுத்தியதால் பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். பொதுமக்களின் கேள்விகளுக்கு முறையான பதிலளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியம் செய்ததால் மருத்துவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

PM Modi Kanyakumari Visit LIVE: விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார் பிரதமர் மோடி

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையாக திகழ்ந்து வருகிறது. கடந்த 18 ஆம் தேதி வடமதுரை அருகே உள்ள பிலாத் பகுதியைச் சேர்ந்த நஷீரா பானு என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 23ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் அறுவை சிகிச்சை மூலமாக பிறந்த குழந்தை என்பதால் தாயாருக்கு தையல் பிரிக்கப்படாத காரணத்தினால் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு 26 ஆம் தேதி சேர்க்கப்பட்டுள்ளார்.

மாதாமாதம் உதவித்தொகை: கவின்கலை, இசை, சிற்பக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், மாத்திரை, மருந்துகள் கொடுக்கப்படாமல் அதற்கு பதிலாக தனியார் மருந்தகங்களில் மாத்திரை, மருந்துகள் வாங்கி வரும்படி நசீரா பானுவின் உறவினர்களிடம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துணைகண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.

Breaking News LIVE: கடும் வெப்பம் - புதுச்சேரியில் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

அதற்கு முறையாக பதில் கூற முடியாமல் நழுவி சென்றது, நோயாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரக்கூடிய நிதிகள் முழுமையாக பயன்படுத்தவில்லை என குற்றச்சாட்டும் முன்வைக்கின்றனர். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளை மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் முறையாக மருத்துவம் பார்ப்பது கிடையாது. பதிலாக தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்கான அனைத்து நெறிமுறைகளையும் கடைப்பிடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola