மத்திய தொழிற்சங்கங்களான ஏஐடியூசி, ஐஎன்டியூசி, சிஐடியூ உள்ளிட்ட 7 தொழிற்சங்கங்கள் மத்திய அரசை கண்டித்து இன்று ஜுலை 9ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைப்பெற்று வருகிறது
நாடு தழுவிய வேலைநிறுத்தம்:
மத்திய தொழிற்சங்கங்களின் இந்த வேலைநிறுத்தத்திற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்க அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் இன்று இந்த வேலைநிறுத்தத்தால் ஸ்தம்பித்து உள்ளது.
ஹெல்மெட் அணிந்த ஓட்டுநர்:
இந்த நிலையில் கேராளவில் அரசுப்பேருந்துகள் வழக்கமாக இயக்கப்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் தாக்கினால் அதிலிருந்து தப்பிக்க ஓட்டுநர் ஒருவர் தலைக்கு ஹெல்மெட் அணிந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
வீடியோவில் வரும் பேருந்தானது பத்தனம்திட்டாவிலிருந்து கொல்லம் செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தது
வழக்கமான இயக்கம்:
கேரள போக்குவரத்து அமைச்சர் கே.பி. கணேஷ் குமார், வேலைநிறுத்தம் குறித்து தொழிற்சங்கங்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராததால், இன்று கே.எஸ்.ஆர்.டி.சி தனது சேவைகளைத் தொடர்ந்து இயக்கும் என்று கூறியதாக செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது. இருப்பினும், தொழிற்சங்கங்களின் வட்டாரங்கள் அமைச்சரின் கூற்றை மறுத்ததாகவும் பி.டி.ஐ தெரிவித்துள்ளது. நாடு தழுவிய போராட்டத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி தொழிலாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
கேரள அரசு உத்தரவு:
இன்றைய வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக , கேரள அரசு ஒரு கடுமையான உத்தரவை பிறப்பித்தது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாட்களாகக் கருதப்படுவார்கள் - அதாவது அந்த நாளுக்கான ஊதியம் மற்றும் சேவை சலுகைகள் எதுவும் இல்லை. பொது நிர்வாகத் துறையின் உத்தரவின்படி, கேரள சேவை விதிகளின் பகுதி I இன் விதி 14A இன் கீழ் ஜூலை 9 அங்கீகரிக்கப்படாத விடுப்பாகக் கருதப்படும். தனிப்பட்ட அல்லது நெருங்கிய குடும்ப நோய், தேர்வுப் பணிகள், மகப்பேறு விடுப்பு அல்லது தவிர்க்க முடியாத பிற அவசரநிலைகள் போன்ற விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் தவிர, வேலைநிறுத்த நாளில் எந்த விடுப்பும் வழங்கப்படாது.
இதே போல மேற்கு வங்க மாநிலத்திலும் அரசுப்பேருந்து ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.