Breaking News LIVE: இரவு 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

ஆர்த்தி Last Updated: 30 May 2024 07:34 PM
Breaking News LIVE: இரவு 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 





Breaking News LIVE: கடும் வெப்பம் - புதுச்சேரியில் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

கடும் வெப்பம் நிலவுவதால் புதுச்சேரியில் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறித்துள்ளது. 


தமிழகத்தில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடும் வெப்பம் நிலவுவதால் ஜூன் 10ஆம் தேதிக்கு பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா எப்போதோ அங்கீகரித்துவிட்டது - வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்

பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா எப்போது அங்கீகரித்து விட்டது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முடிவில் இந்தியாவுக்கு எந்த மாற்றமும் இல்லை. 1980 களிலேயே பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்து விட்டது. நார்வே, அயர்லாந்து, ஸ்பெயின் நாடுகள் தற்போது தான் பாலசீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. - வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

Breaking News LIVE: ராஜேஸ்தாஸ் மனுவை தள்ளுபடி செய்க - பீலா வெங்கடேஷ்


சேலம் குருவம்பட்டி வன உயிரிகள் பூங்காவில் மான் முட்டியதில் ஊழியர் தமிழ்ச்செல்வன் உயிரிழப்பு 

மான் முட்டியதில் வனத்துறை ஊழியர் உயிரிழப்பு


சேலம் குருவம்பட்டி வன உயிரிகள் பூங்காவில் மான் முட்டியதில் ஊழியர் தமிழ்ச்செல்வன் உயிரிழப்பு 


காயமடைந்த முருகேசன் என்பவர் சிகிச்சைக்காக  சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி

மான் முட்டியதில் வனத்துறை அதிகாரிகள் இருவர் படுகாயம்.

சேலம் குருவம்பட்டி வன உயிரிகள் பூங்காவில் மான் முட்டி முருகேசன், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவர் படுகாயம்.


காயமடைந்த இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமாகா மாநில தேர்தல் முறையீட்டு குழு உறுப்பினர் கௌதமன் கட்சியில் இருந்து விலகல்!

பாஜகவுடன் கூட்டணி, மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா மாநில தேர்தல் முறையீட்டு குழு உறுப்பினர் கௌதமன் கட்சியில் இருந்து விலகல்!

ஒடிஷாவில் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி

Coimbatore Leopard : கோவை: தடாகம் அருகே சோமையனூரில் தெருக்களில் வலம் வந்த சிறுத்தையால் பரபரப்பு

கோவை: தடாகம் அருகே சோமையனூரில் தெருக்களில் வலம் வந்த சிறுத்தை ஒன்று, சுற்றுச்சுவர் மீது அமர்ந்திருந்த கோழியை அலேக்காக கவ்விச் செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தனியார் நிறுவன ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது

சென்னையை சேர்ந்த அக்னிகுல் காஸ்மோஸ் என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் ஸ்டார்டெட் ( sorted ) என்கிற ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

Breaking News LIVE: பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசன் கைது..!

மதுரையில் செல்போன் பேசியப்படி ஒற்றை கையில் அஜாகிரதையாக காரை ஒட்டிச் சென்ற டிடிஃப் வாசனை போலீசார் கைது செய்துள்ளனர். 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு..!

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை இன்று தொடங்குவதற்கான சூழல் சாதகமாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

Breaking News LIVE: 45 மணி நேரம் தியானத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி..!

இன்று மாலை 5 மணியளவில் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி, மாலை 6 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானத்தை தொடங்குகிறார். ஜூன் 1 ஆம் தேதி மதியம் 3 மணி வரை அதாவது, 45 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட உள்ளார். 

Breaking News LIVE: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பயணத் திட்டம் என்ன?

இன்று டெல்லியில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, மாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைகிறார். அங்கு பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின், அங்கு விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு தியான மண்டபத்துக்கு சென்று மாலை 6 மணி அளவில் தியானத்தை தொடங்குகிறார்.

Background

நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலில், ஏற்கனவே 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், 90 சதவிகித தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு வரும் ஜுன் 1ம் தேதி ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 


அது நிறைவடைந்ததும், 7 கட்டங்களாக பதிவான வாக்குகளும், மொத்தமாக ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.  இந்த கட்டத்தில் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், கடைசி கட்ட தேர்தல் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. 


தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச், சேர்ந்த 57 தொகுதிகளில் கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் பீகாரைச் சேர்ந்த 8 தொகுதிகள், சண்டிகரைச் சேர்ந்த ஒரு தொகுதி, இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 4 தொகுதிகள், ஜார்கண்டைச் சேர்ந்த 3 தொகுதிகள், ஒடிஷாவைச் சேர்ந்த 6 தொகுதிகள், மேற்குவங்கத்தைச் சேர்ந்த 9 தொகுதிகள், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலா 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


இது போன்ற சூழலில், இன்று மாலை பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தர உள்ளார்.  முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் கோட்டையிலும், 2019-ம் ஆண்டு இமயமலையில் உள்ள கேதார்நாத் குகையிலும் தியானம் மேற்கொண்டார். அவ்வகையில் நடப்பாண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடையும் நிலையில், இந்த முறையும் தியானம் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை, மோடி தேர்வு செய்துள்ளார். 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.