பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கு செல்ல வழி இல்லாமல் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை தூக்கிச் செல்லும் அவலம். மயானத்திற்கு இடம் கொடுத்து தற்போது வரை மயானமும், மயானத்திற்கு செல்லக்கூடிய சாலையும் அமைத்துத் தராத பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Karnataka CM: ”கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த விரும்பவில்லை;முதுகில் குத்த மாட்டேன்” : டெல்லி செல்லும் முன் டி.கே சிவக்குமார்




திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அப்பிய நாயக்கன்பட்டி பகுதி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 50 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வேலைக்கு,மற்றும் கல்வி பயில மாணவ, மாணவிகள் அப்பியநாயக்கன்பட்டிக்கு அருகே உள்ள சந்தனவர்தினி ஆற்றின் ஓடையை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.


Lyca Productions: திரையுலகில் பெரும் பரபரப்பு... லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை




இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக சந்தான வர்த்தினி ஓடை அருகே இறந்தவர்களின் உடலை புதைத்து வந்தனர். தற்போது அப்பியநாயக்கன்பட்டி கிராம மக்களுக்காக மயானத்திற்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடத்திற்கு செல்வதற்கு பாதைகளை முறையாக பாலகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. மேலும் நேற்று இறந்தவரின் உடலை மயானத்திற்கு செல்லும் வழியில் சந்தான வர்த்தினி வாய்க்கால் உள்ளதால் தற்போது பெய்துள்ள மலையின் காரணமாக வாய்க்கால் முழுவதும் நீர் நிரம்பியுள்ளது.


IPS Transfer: 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. உள்துறை முதன்மை செயலர் பி. அமுதா அதிரடி..




Vegetable Price: சதமடித்த பீன்ஸ், எலுமிச்சை.. உயர்ந்தது கத்திரிக்காய், கேரட் விலை.. மற்ற காய்கறிகளின் விலை பட்டியல் இதோ.


இதனால் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர்களின் உடலை சுமந்து கொண்டு சென்று புதைக்க கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மயானத்திற்கு சாலை வேண்டுமென்று பலமுறை பஞ்சாயத்து தலைவர் ரேவதி நாகராஜிடம் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண