திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில், வியாழக்கிழமைதோறும் ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையான இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஆடு, கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்கி செல்வர். இந்தநிலையில் வருகிற 29-ந்தேதி வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குர்பானி கொடுப்பதற்காக, இஸ்லாமியர்கள் அதிக அளவில் ஆடுகளை வாங்குவது வழக்கம்.


Regina Review: சுனைனாவின் ஆக்‌ஷன் அவதாரம்... சரவெடியா, சலிப்பா... எப்படி இருக்கு ரெஜினா படம்?



அதன்படி, நேற்று அய்யலூரில் கூடிய ஆட்டுச்சந்தை களை கட்டியது. அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். வெள்ளாடுகளை விட செம்மறி ஆடுகள் விற்பனை சூடு பிடித்தது. முறுக்கு கொம்புகளுடன் கூடிய நல்ல திடகாத்திரமான செம்மறி ஆட்டு கிடாய்கள் ரூ. 40 ஆயிரம் வரை விற்பனையானது. வியாபாரிகளை கவரும் வகையில், செம்மறி ஆடுகளுக்கு விசேஷ அலங்காரம் செய்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.


Obama On White House: 30 வருஷத்துக்கு முன்னாடி எப்படி வந்தேன் தெரியுமா?.. அமெரிக்காவில் பிரதமர் மோடி சொன்ன குட்டி ஸ்டோரி..



Patna Meeting: பீகாரில் நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்.. பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி


10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை ஆனது. 10 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.7 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.400-க்கு விற்பனையானது. சண்டைக்கு பயன்படும் சேவல்களை வியாபாரிகள் மோதவிட்டு பார்த்து வாங்கி சென்றனர். சண்டை சேவல்கள், அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. பக்ரீத் பண்டிகையையொட்டி அய்யலூர் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச்சந்தையில் செம்மறி ஆடுகள் விற்பனை அதிகமாக நடந்தது. நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.2½ கோடிக்கு விற்பனை நடந்தது என்று தெரிவித்தனர்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 



 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண