ராமநாதபுரம் மாவட்டம் கரிசல்குளம் குண்டாற்று படுகையில் பட்டா நிலத்தில் சட்ட விரோத மணல் குவாரி நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கில், விசாரணை நடத்தி விசாரணை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் கரிசல்குளத்தைச் சேர்ந்த முருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், குண்டாற்று படுகையில் எங்கள் கிராமம் அமைந்துள்ளது. 3 அடி ஆழத்திற்கு சவடு மண்ணும், அதன்கீழ் ஆற்று மணலும் படிந்துள்ளன. கடலாடி மற்றும் வேப்பங்குளத்தில் பட்டா நிலத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி செயல்படுகிறது. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, சுப்ரமணியன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.  அரசுத் தரப்பில், கடலாடி தாசில்தார் தலைமையிலான குழு சம்பந்தப்பட்ட பட்டா நிலங்களை ஆய்வு செய்தது மேல் பகுதியில் களிமண்ணும், அடிப்பகுதியில் வண்டல் மண்ணும் நிறைந்துள்ளன. ஒரு இடத்தில் 1917 கியூபிக் மீட்டரும், மற்றொரு இடத்தில் 1170 கியூபிக் மீட்டர் அளவுக்கும் எடுத்துள்ளனர்.  இதன் மீது விசாரணை நடந்து வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


 


இதையடுத்து நீதிபதிகள், விசாரணையே இன்னும் முடியவில்லை. விசாரணை முடித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை  அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 19க்கு தள்ளி வைத்தனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.