பெரியகுளம் முக்கிய சாலைகளில் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக விரைவில் சிறப்பான மக்களாட்சி வழங்குவார் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
திரைப்பட நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைத்தனர். இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் பகுதியில் முக்கிய வீதிகளில் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டனர். இதில் நேர்மையில் கக்கன் வழி, திட்டத்தில் காமராஜ் வழி, ஏழைகளுக்காக புரட்சித் தலைவர் எம் ஜிஆர் வழி, விரைவில் விஜய் வழியில் சிறப்பான மக்களாட்சி என வசனங்களுடன் முக்கிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
Thangam Thennarasu: வள்ளலார் குறித்த ஆளுநர் கருத்து.. அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்தலில் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களை அழைத்து அவர்களை கௌரவப்படுத்தி கலை வழங்கினார். இந்நிலையில் அவரது ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என நோக்கத்துடன் திரைப்பட நடிகர் விஜய் தெரிவிக்கும் விதமாக பெரியகுளம் பகுதிகளில் அவரது ரசிகர் மன்றம் சார்பாக பல்வேறு இடங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என நோக்கத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக ஒட்டப்பட்டுள்ள பேனரால் பெரியகுளம் பகுதி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்