ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை அருகே ரோட்டை கடக்க முயன்ற முதியவர் மீது பின்னால் வந்த கார் மோதி முதியவர் சம்பவ இடத்தில் பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Gyanvapi Mosque Verdict: ஞானவாபி மசூதியில் வழிபட அனுமதி வேண்டி மனு.. விசாரணைக்கு உகந்தது என தீர்ப்பு..




திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை அம்புளிக்கை அருகே வல்ல குண்டாபுரத்தைச் சேர்ந்த செல்லமுத்து வயது 67.  அம்பிளிக்கை அருகே உள்ள நாற்றுப் பண்ணைக்கு செல்ல வந்தவர் அம்பிளிக்கை அருகே நான்குவழிச் சாலையை திடீரென கடக்க முயன்ற போது திருப்பூரிலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி  வந்த கார் பின்னால் பலமாக மோதியதில் செல்லமுத்து தூக்கி வீசபட்டு சம்பவ இடத்திலேயே  பலியானார் .


நான் தனித்து போட்டியிட்டிருந்தால் கூட 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பேன் - பாரிவேந்தர்.




இச்சம்பம் குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்கு பதிவு செய்து  இறந்த செல்லமுத்து உடலை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய காரை  ஓட்டி வந்த திருப்பூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




பழனியில் மது போதையில் அதிவேகமாக காரை ஒட்டிய ‌சாலையோரத்தில் இருந்த வீட்டிற்குள் காரை செலுத்திய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கார் ஓட்டி இளைஞர்களுக்கு பொதுமக்கள்  தர்ம அடி கொடுத்தனர்.




திண்டுக்கல் மாவட்டம் பழனி  ஆர்எம்கே நகரை சேர்ந்தவர் பிரசாந்த். கார் மெக்கானிக்காக பணிபுரியும் இவர் தனது நண்பர்களுடன் கொடைக்கானல் சாலையில் மது அருந்திவிட்டு பழனி-கோவை புறவழிச் சாலையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது மருத்துவநகர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த தண்டபாணி என்பவரின் வீட்டிற்குள்  புகுந்ததது.


Watch Video: நீண்ட மாதங்களுக்கு பிறகு புன்னகை..! ஆசிய கோப்பை வென்ற மகிழ்ச்சியில் வீதிகளில் கொண்டாடித் தீர்த்த இலங்கை மக்கள்..!




இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கார் உள்ளே புகுந்த விபத்தால் வீடு முழுவதுமாக சேதம் அடைந்தது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காரில் வந்த இளைஞர்களை பிடித்து அப்பகுதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த பழனி அடிவாரம் போலீசார் இளைஞர்களை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். போலீசார் முன்னிலையில் இளைஞர்களை பிடித்து பொதுமக்கள் தர்மடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண