மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட மக்களின் குடி நீர் ஆதாரமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை மூலம் 2 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெறுகிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. இந்த அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் கடந்த 1916ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி இறந்தார்.

Continues below advertisement


Real God Jesus Row : "இயேசு உண்மையான கடவுள்..” : பாதிரியார் - ராகுல் காந்தி சந்திப்பு.. மோதும் பாஜக, காங்கிரஸ்..


இவரது கல்லறை லண்டனில் உள்ள புனித பீட்டர்ஸ் தேவாலய வளாகத்தில் உள்ளது. இங்குள்ள கேம்பர்லி பூங்காவில் தமிழக அரசு சார்பில் பென்னி குவிக் சிலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.


உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை! விவரம்!


இதற்காக தமிழக அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் தேனி எம்.எல்.ஏ.க்கள் சரவணகுமார், மகாராஜன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றனர். தற்போது இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் மறைவால் அந்நாட்டில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பென்னி குவிக் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற இருந்தது. 




ஆனால் லண்டன் நாட்டு ராணி எலிசபெத் மறைவுக்கு இங்கிலாந்து நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது லண்டனிலும் அது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக பென்னி குவிக் சிலை திறப்பு விழா  எளிமையான முறையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.


World Suicide Prevention Day: உலக தற்கொலை தடுப்பு தினம் : நண்பர்களை கவனியுங்கள்! கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க!




திருவண்ணாமலை: பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 47 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்


இந்த நிலையில் பென்னிகுவிக் அவர்களின் புகழைப் போற்றும் வண்ணமாக அவருக்கு லண்டனில் சிலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமாக தேனி மாவட்ட ஆட்சியர்  முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண