திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ராஜாபுரம் ஊராட்சி. இங்குள்ள 2வது வார்டில் வசித்து வருபவர் மகேஷ்வரன்-லதா தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை பிறந்து நான்கு மாதங்களே ஆன கோகுல் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தை மகேஷ்வரன் வேலைக்கு சென்ற நேரத்தில், வீட்டில் தாய் லதா, நான்கு மாத குழந்தை கோகுல் உடன் தனியாக இருந்து உள்ளார்.
அப்போது கோகுலை வீட்டில் படுக்கவைத்து விட்டு கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது குழந்தை கோகுலை காணவில்லை எனக்கூறி தாய் லதா அக்கம்பக்கத்தில் உறவினர்களுடன் சேர்ந்து குழந்தையை தேடி உள்ளார். அப்போது அருகில் உள்ள பாலாறு பொருந்தலாறு ஆற்றின் கரையில் அமலைச்செடிகளுக்கு நடுவே குழந்தை சடலமாக இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து உடனடியாக குழந்தையை பழனி அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்த போது, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பழனி தாலுகா போலீசார் குழந்தையின் தாய், தந்தையிடம் விசாரணை செய்தனர். தாய் லதா முன்னுக்குப்பின் முரணாக போலீசாரிடம் பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் .
தாயிடம் நடத்திய தீவிர விசாரணையில் தாய் லதாவே குழந்தையை கொன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது. மேலும் தனக்கு மனக்கஷ்டமும், உடல்நிலையும் சரியில்லை என்றும், குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் பார்த்த போது குழந்தைக்கு நேரம் சரியில்லை என்று ஜோதிடர்கள் கூறியதாகவும், இதனால் தனது மகனை ஆற்றில் தூக்கி வீசி கொன்றதாக தாய் லதா தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் பழனி தாலுகா காவல் துறையினர் தாய் லதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நகையை அடகு வைக்க சென்ற மனைவியை வங்கிக்குள் புகுந்து சரமாரியாக வெட்டி கொன்ற கணவன்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்