திருமங்கலம் அருகே 4 லட்சம் மதிப்புள்ள 340 கிலோ கஞ்சாவை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






மதுரை திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று அதிகாலையில் கப்பலூர் சுங்கச்சாவடியில் அருகே டாட்டா சுமோ வாகனத்தை சோதனை செய்ததில் 4 பேர் கொண்ட கும்பல் 340 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த 4 பேரையும் கைது செய்தனர்.




இந்த கடத்தல் தொடர்பாக கூடல்நகர் பகுதியைச் தெய்வம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார், ரமேஷ் மற்றும் மதுரை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் வைத்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம், வாடிப்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி, அழகர்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்கலில் கஞ்சா பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை பள்ளி, கல்லூரி மாணவர்களும் சட்ட விரோதமாக பயன்படுத்து வேதனை அளிக்கிறது. மதுரை நகர் மற்றும் மாநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்கும் போது கஞ்சா பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


’ இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ‘ - Assembly : எல்லா பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்க பெண்களை அனுமதிக்கணும் - பேரவையில் பேசிய செல்லூர் ராஜு