திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தாளையம் சப்பல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (42). விவசாயி. இவர், கடந்த 2020-ம் ஆண்டு 14 வயதுடைய 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Married Woman : திருமணமான பெண்ணுடன் சம்மதத்துடன் பாலியல் உறவு.. பாலியல் வன்கொடுமையாகாது : உயர்நீதிமன்றம் கருத்து




 


மேலும் அவர் மீது திண்டுக்கல் விரைவு மகிளா  நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி வாதாடினார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட வேலுச்சாமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.




திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே செம்பிரான்குளத்தில் உள்ள தனியார் தோட்டத்துக்குள் கடந்த 21-ந்தேதி கடமான் ஒன்று புகுந்தது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள், கடமானின் உடலை கைப்பற்றி பரிசோதனை செய்து அப்பகுதியில் குழிதோண்டி புதைத்தனர்.


Headlines Today: மின்இணைப்பு எண்ணுடன் இனி ஆதார்..! சூடுபிடிக்கும் மங்களூர் குண்டுவெடிப்பு விசாரணை.. இலங்கையை வீழ்த்திய ஆப்கான்..! இன்னும் பல


இதையடுத்து மாவட்ட வன அலுவலர் திலீப், வனச்சரகர் குமரேசன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் மான் இறந்தது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரும்பள்ளம் பகுதியை சேர்ந்த மகுடேஸ்வரன் மகன் கருப்புத்துரை (23) என்பவர் மின்வேலி அமைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.



இதற்கிடையே கருப்புத்துரை, ஜாமீன் கேட்டு கொடைக்கானல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு குற்றவியல் நடுவர் கார்த்திக் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருப்புத்துரைக்கு ஜாமீன் வழங்கி அவர் உத்தரவிட்டார். மேலும் நூதன தண்டனையாக கருப்புத்துரைக்கு  நடுவர் வழங்கினார். அதன்படி, கருப்புத்துறை ரூ.25 ஆயிரத்தை மாவட்ட வன அலுவலரிடம் செலுத்த வேண்டும்.


Bigg Boss 6 Tamil: ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றமா..? இந்த வார பிக்பாஸ் தொகுப்பாளர் யார்..?


அதன்மூலம் வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் நன்மைகள், வனப்பகுதிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதுதொடர்பான அறிக்கையை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண