இந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து, ராபர்ட் மாஸ்டர் போட்டியை விட்டு வெளியேறவுள்ளார் என்ற தகவல் பரவிவருகிறது.
ஒவ்வொரு வாரமும், விதவிதமான டாஸ்க் விளையாடப்படும். சாதரணமாகவே, பிக்பாஸ் வீட்டில் அனைத்து விஷயங்களுக்கும் பேச்சுவார்த்தை நடக்கும். அந்தவகையில் இந்த வாரம் பேச்சுவார்த்தை செய்வதற்கே கொடுக்கப்பட்ட டாஸ்க்காக பிக்பாஸ் நீதிமன்றம் டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் முழுவதுமே பெரிதாக எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை, இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை வைத்து செய்யும் நெட்டிசன்களுக்கும் கண்டெண்ட் எதுவும் சிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
டாஸ்க்கின் இறுதிநாளான இன்றைய நாளின் ப்ரோமோவில், ஏதாவது சிக்கும் என்று எதிர்ப்பார்த்தால், அதுவும் சற்று மொக்கையாகதான் இருந்தது. மூன்றாவது ப்ரோமோவில், சிறப்பாக விளையாடாத நபர்களின் பெயரை கூறவேண்டும் என்று பிக்பாஸ் அறிவிப்புவிடுக்கிறார். முதலில் வந்த ரச்சித்தா ராபர்ட் பெயரை சொல்ல, அதன் பின் வந்த ராபர்ட் ரச்சித்தா பெயரை சொன்னார்.
இதனைதொடர்ந்து அனைவரும் ரச்சித்தா, ராபர்ட் மற்றும் குயின்ஸி ஆகிய மூன்று பெயர்களை மாற்றி மாற்றி கூறுகின்றனர். அதிக நிராகரிப்புகளை பெற்ற ராபர்ட் மற்றும் குயின்ஸியை சிறைக்கு செல்லும்படியாக பிக்பாஸ் உத்தரவிடுகிறார்.
கொடுக்கபட்ட டாஸ்க்கை சரியாக விளையாடவில்லை என்று ஜெயிலுக்கு தள்ளப்பட்ட ராபர்ட் மாஸ்டர், இந்தவாரம் குறைந்த ஓட்டுக்களை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
இந்த வாரம் கமல் தொகுத்து வழங்குவாரா ?
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்ற கமல், உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்ற பின், அவர் இன்று வீடு திரும்பினார். மருத்துவர்கள் அவரை சற்று ஓய்வு எடுக்கமாறு வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் யார் தொகுத்து வழங்குவார் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிம்புவும் பத்து தல பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். பிக்பாஸை ரம்யா கிருஷ்ணனும் தொகுத்து வழங்கினார். இந்த வாரத்தில் அவர் பங்குபெற வாய்ப்புள்ளது. ஆனால் அதிகாரபூர்வமாக எதுவும் வெளியாகவில்லை.