தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் நிலம் வாங்கியதில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டு நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
PM Modi Speech: கிராமத்தின் ஆன்மா..நகரத்தின் வசதி...தமிழில் பேசி அசத்திய பிரதமர் மோடி..
இந்நிலையில் இந்த வழக்கை முடித்து தரக்கோரி செல்வம் என்பவரின் மகன் உதயகுமார் 27 வயது என்ற இளைஞர், மது போதையில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலக கேட்டை அடைத்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதை தடுக்க வந்த காவல்துறையினரிடம் தகாத வார்த்தைகளால் திட்டியும், உன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு தொடுப்பேன் என மிரட்டியும் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் வடகரை காவல்துறையினர் மது போதையில் இருந்து அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்பு அவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காவல்துறையினர் முடித்துக் கொடுக்க கோரி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இறுதியாக மாலையில் அவருக்கு போதை தெளிந்த பின்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலக கேட்டை அடைத்து ரகளையில் ஈடுபட்டதற்காகவும், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதற்காகவும், பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் இளைஞர் உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ரகளை ஈடுபட்ட இளைஞரை பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிறுத்தியதை தொடர்ந்து நீதிபதியின் உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து சிறையில் அடைத்தனர். பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலக கேட்டை அடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்