பல்லடத்தில் வரும் 27 ஆம் தேதி பெரிய லேகியம் விற்கப்போகிறேன். லஞ்சம், ஊழல், குடும்ப ஆட்சி எல்லாத்துக்கும் லேகியம் விற்க போகிறேன் - மதுரையில் அண்ணாமலை பேச்சு.

 

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் 103 - வது நாளாக என் மண் - என் மக்கள் நடை பயணத்தை இன்று பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது வாகனத்தில் இருந்தவாரு அண்ணாமலை பேசுகையில், "இந்த நடை பயணம் இறுதி விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார். 2024 திராவிட அரசை வேரோடு சாய்க்க உள்ளனர். மதுரை என்றால் வீரம் அதிரடி தான். ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் மதுரையில் இருந்து தான் ஆரம்பிப்பார்கள் முடிக்க வேண்டும் என்றாலும் மதுரையில்தான். எந்த தேர்தலிலும் யார் ஜெயிப்பார்கள் என்று கடைசி இது தான் தெரியும் ஆனால் வரும் 2024 தேர்தலில் மட்டும் தான் யார் ஜெயிப்பார்கள் என்று தெரியும். மீண்டும் மோடி தான் ஜெயிக்கப் போகிறார் என்று தெரிந்து இந்த தேர்தலில் நடக்கிறது.




 

பா.ஜ.க., 400 இடங்களில் வெற்றி பெறும். மோடி நினைக்கின்ற கனவு தமிழகத்திலும் நடக்கும். இதற்கு முன்பு தமிழ், தமிழ்நாட்டில் உள்ளே இருந்தது. அதனை மோடி உலகம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது இந்தியாவை பிரித்துக் கொண்டிருக்கிறது. சங்கங்கள் மூலமாக பிரதமர் மோடி இந்தியாவை இணைத்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்திலிருந்து அயோத்திக்கு 117 ரயில் செல்கிறது. முதல்வர் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என உளறிக் கொண்டிருக்கிறார். திமுக அரசு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால், அரசியல் இருந்து விலகி நான் விவசாயத்திற்கு செல்கிறேன். மதுரையை பொறுத்தவரைக்கும் மூர்த்தி TAX (அமைச்சர் மூர்த்தி) நடக்கிறது. தமிழகத்தில் லஞ்சம் ஊழல் செய்பவர்களை பா.ஜ.க., வேட்டையாட போகிறோம். லஞ்சம் என்பது தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஊழல் செய்பவர்கள் அரசியலில் இருக்கக் கூடாது” என்றார்.

 

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அண்ணாமலை லேகியம் வித்துக் கொண்டிருக்கிறார் என விமர்சனம் செய்ததற்கு பதில் கூறிய அண்ணாமலை

 

27 ஆம் தேதி பல்லடத்தில் பெரிய லேகியம் விற்கப்போகிறேன்.. லஞ்சம், ஊழல், குடும்ப ஆட்சி எல்லாத்துக்கும் லேகியம் விற்க போகிறேன் என்றார்.