தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (22.10.2024) நாமக்கல்‌ மாவட்டம்‌, பொம்மை குட்டைமேட்டில்‌ நடைபெற்ற அரசு விழாவில்‌, 298 கோடியே 2 இலட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ 134 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 365 கோடியே 69 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டிலான 140 புதிய திட்டப்‌ பணிகளுக்கு அடிக்கல்‌ நாட்டி,
16,031 பயனாளிகளுக்கு 146 கோடியே 56 இலட்சம்‌ ரூபாய்‌ செலவிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.


நாமக்கல்லில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:


''தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக நாமக்கல் மாவட்டம் இருக்கிறது. இங்கு விழா நடப்பது சரியானது. நாமக்கல்லில் கலைஞர் சிலை திறந்திருப்பது பொருத்தமானது. புதுமைப் பெண் திட்டத்தில் நாமக்கல்லில்தான் அதிக அளவிலான மாணவிகள் பயன் பெறுகின்றனர். தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் அதிக மாணவர்கள் பயன்பெறும் 2ஆவது மாநிலமாக நாமக்கல் உள்ளது.


ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று ஆய்வு


நாமக்கல்லை மாவட்டமாக உயர்த்தியவர் கருணாநிதி. மாநகராட்சியாகத் தரம் உயர்த்தியது திமுக அரசு. நாமக்கல் மாவட்டத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ரூ.10 கோடி ஒதுக்கப்பட உள்ளது. நவம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நானே நேரடியாகச் சென்று, கள ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.


திமுகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கனவு உலகத்தில் வாழ்கிறார்''.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 


இந்த நிகழ்ச்சியில்‌, நகராட்சி நிர்வாகத்‌ துறை அமைச்சர்‌ கே.என்‌. நேரு,  பொதுப்பணித்‌ துறை அமைச்சர்‌
எ.வ. வேலு, சுற்றுலாத்‌ துறை அமைச்சர்‌ ஆர்‌. ராஜேந்திரன்‌, ஆதிதிராவிடர்‌ நலத்துறை அமைச்சர்‌ மருத்துவர்‌
மா.மதிவேந்தன்‌, நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌  கே.ஆர்‌.என்‌. ராஜேஷ்‌
குமார்‌, வி.எஸ்‌. மாதேஸ்வரன்‌, கே.இ.பிரகாஷண்‌, சட்டமன்றஉறுப்பினர்கள்‌ கே. பொன்னுசாமி, பி. இராமலிங்கம்‌, இ.ஆர்‌. ஈஸ்வரன்‌, தலைமைச்‌ செயலாளர்‌ திரு. நா. முருகானந்தம்‌, இ.ஆ.ப., நாமக்கல்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மருத்துவர்‌ சசி உமாமற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.