சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஞானம் வீட்டுக்கு வந்திருந்த பங்காளிகளுக்கு பணத்தை கொடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறான். அப்போது அங்கு வந்த அப்பத்தா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். 


 



வீட்டில் சம்பந்திகள் இருக்கும் போது குணசேகரன் தம்பிகளை உட்கார சொல்கிறார். அது அவமரியாதையாக இருக்கும் என ஞானம் சொன்னாலும் வயசுல பெரியவங்க எல்லாரும் பெரிய மனுஷங்க இல்ல என சொல்லி உட்கார சொல்கிறார். பல விஷயங்களை பேசி தீர்த்தாக வேண்டும் என குணசேகரன் சொன்னதும் உடனே முதலிரவு மேட்டருடன் ஆரம்பிக்கிறான் கரிகாலன். அதை கேட்ட அனைவரும் முகம் சுளிக்கிறார்கள். ஆதிரையை கூப்பிட்டு கண்டிக்கிறார் குணசேகரன். "குடும்பம் நடத்த வா வா என எவ தான் வருவா. கதிர் தான் இதுல எக்ஸ்பர்ட். அவன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க" என கரிகாலனிடம் சொல்கிறார் குணசேகரன். 


ஈஸ்வரியை அழைத்து "ஏன் கதிரை அடிச்ச?" என கேட்கிறார். "கதிர் என்ன பேசினான் என முதலில் சொன்னானா?" என ஈஸ்வரி கேட்கிறாள். "அது தான் நீங்க எல்லாரும் பேசினதை போனில் கேட்டேனே. என்னோட தம்பிகளை விடவும் நீங்க தான் நான் காணாமல் போனவுடன் பதறி போனீங்க போல. சரி ஒரு ஆம்பிளையை எப்படி நீ கைநீட்டி அடிப்ப. வயசுல சின்னவன்னு கைநீட்டுனியா" என்கிறார். 


 



"அவன் செஞ்சது தப்பு என பட்டது அதனால் அடிச்சேன்" என சொல்லவும் குணசேகரன் ஈஸ்வரியை அறைந்து விடுகிறார். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைய கதிர் கை தட்டி கொண்டாடுகிறான். 


அடுத்ததாக நந்தினியை கூப்பிட்டு "வெளில போய் சோத்து வியாபாரம் பண்றியா? அதுவும் குணசேகரன் வீட்டில் இருந்து கொண்டு" என கேட்க நந்தினி திமிராக பதில் சொல்ல அதற்கும் ஈஸ்வரியை தான் அடிக்கிறார். "இந்த வீட்டை விட்டு யார் போனாலும் பொணமா தான் போகணும். பேசாம மொத்தமா எல்லாரும் விஷத்தை வாங்கி சாப்பிட்டு செத்து போயிடுங்க.. மொத்தமா குழி தோண்டி புதைச்சிடுறேன்" என்கிறார். 


"உங்களுக்கு ஏன் வேலை கொடுக்குறாங்க பளபளவென இருக்கீங்கன்னு தான் கூப்பிட்டு கொடுக்குறாங்க" என அநாகரீகமாக பேசுகிறார். இனிமே எதிர்த்து பேசினால் அடி தான் என தம்பிகளையும் ஏத்திவிடுகிறார். நந்தினியின் அப்பாவை மரியாதை இல்லாமல் பேசி எல்லாரையும் கிளம்ப சொல்கிறார். "ஒரு அம்பாளை வீட்டில் இல்ல என்றதும் பொம்பளை ஆதிக்கம்  செய்றாளுங்க" என சொல்லிவிட்டு செல்கிறார். 


 



அப்பத்தா பெண்கள் அனைவரிடமும் பேசுகிறார். "ஏற்கனவே தயாரா இருங்க என சொன்னேன். என்னால சொல்ல மட்டும் தான் தான் முடியும். உங்க வாழ்க்கைக்காக நான் யோசிக்க முடியாது. அதை நான் செய்யவும் மாட்டேன்" என்கிறார். "ஏன் எங்களை தூண்டிவிட்டு இப்ப இப்படி பேசுறீங்க?" என ரேணுகா கேட்கிறாள். "ஆமாம் நான் தூண்டித்தான் விட்டேன். எனக்கு கிடைக்காத வாய்ப்பை நான் உங்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தேன். உங்களுக்கு வழியை தான் காட்ட முடியும். அதில் வெற்றி பெற நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும்" என்கிறார் அப்பத்தா. 


"குணசேகரன் பேசி முடிச்சுட்டான் என நினைக்காதீங்க.அவன் மனசுல எதையோ வைச்சுக்கிட்டு தான் இப்படி காய் நகர்த்துகிறான்" என ஷாக் கொடுக்கிறார் அப்பத்தா. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.