ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் இதுவரை இந்தியா விளையாடிய மூன்று போட்டிகளிலும் சேஸிங் செய்து வெற்றிபெற்று கலக்கி உள்ளது. 


கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இச்சூழலில் இந்த தொடரில் இந்தியா விளையாடிய மூன்று போட்டிகளில் சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. அதன் தொகுப்பை பார்ப்போம்:



ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அசத்திய இந்தியா:


உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியாக ஆஸ்திரேலியா உடன் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மோதியது. 5 வது லீக் ஆட்டமான இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவர்களில் சேஸ் செய்தது.


அதன்படி, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 201 ரன்கள் எடுத்து உலகக் கோப்பை தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள்.


ஆப்கானை அலறவிட்ட இந்தியா:


கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் ஆப்கானிஸ்தானை எதிர் கொண்டது இந்தியா. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.  


இந்த போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 272 ரன்கள் எடுத்தது. பின்னர், 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இதில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிபடுத்தினார்கள். இதில், இந்திய அணி 273 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது.


பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா:


இந்நிலையில், பாகிஸ்தான் அணியுடன் நேற்றைய போட்டியில் இந்திய அணி மோதியது. இந்த போட்டியிலும் இந்திய அணி சேஸிங் முறையில் வெற்றி பெற்றது. அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்தது. 


இதில், 193 என்ற இலக்குடன் சேஸிங்கில் இறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இவ்வாறாக இந்திய அணி நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் சேஸிங் முறையில் வெற்றி பெற்றது.


 


மேலும் படிக்க: ODI WC 2023 Virat Kohli: சேஸிங்கில் அசத்துவாரா சேஸ் மாஸ்டர் கிங் கோலி? அகமதாபாத் மைதானத்தில் இதுவரை எப்படி?


 


மேலும் படிக்க: IND vs PAK WC: உலகக் கோப்பையில் ஆதிக்கம்; இந்தியாவுக்கு எதிராக தொடரும் பாகிஸ்தானின் சோகம் - இதுவரை எப்படி?