வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் மதுரை மண்ணின் மைந்தன் நடிகர் சூரி  சசிகுமார், மற்றும் உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான  கருடன் திரைப்படம் தமிழகம் எங்கும் இன்று  ரிலீஸ்சான நிலையில் மதுரையில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

 

மக்கள் மனதை வென்ற சூரி


மதுரை மண்ணின் மைந்தன் சூரி, காமெடியில் இருந்து தேர்ந்த நடிகராக உருவெடுத்துள்ளார். விடுதலை படத்துக்குப் பிறகு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் பிரதான கதாநாயகனாக கருடன் திரைப்படம் என்ற படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  இயக்குநர் துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சசிக்குமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ஷிவதா, ரேவதி ஷர்மா, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.  இப்படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி கவனமீர்த்து பாராட்டுகளைப் பெற்ற நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியாகியானது. இந்நிலையில் நடிகர் சூரியின் சொந்த ஊரான மதுரையில் ரசிகர்கள் மேள, தாளங்களுடன் பால்குடம் எடுத்து கொண்டாடினர்.


 

மதுரையில் சூரி ரசிகர்கள் கொண்டாட்டம்

 

மதுரை மாவட்டத்தில் 20- க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கருடன் திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் சூரி அதிகமாக வந்து செல்லும் மதுரை சாத்தமங்கலத்தில் உள்ள சினிப்ரியா காம்ப்ளக்ஸ் திரையரங்கில் கருடன் திரைப்படம் திரையிடப்பட்டது. இதனால் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கள் முன் குவிந்தனர். முன்னதாக மதுரை மாவட்டத்தில் அகில இந்திய சூரி நற்பணி இயக்கத்தின் தலைவர்‌ எம் ஆதீஸ்வரன், பொது செயலாளர் சூரிய பிரகாஷ் உள்ளிட்டோர் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆவின் பால் விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்து சினிப்பிரியா தியேட்டரில் வைக்கப்பட்ட சூரியின் பிரமாண்ட கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தனர். சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அதைத் தொடர்ந்து டி.ஜே பாடலுக்கு பெண்கள் குத்தாட்டம் போட்டனர்.  திரைப்படம் காண வந்த ரசிகர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

 

மகிழ்ச்சியில் சூரி ரசிகர்கள்

 

இது குறித்து நடிகர் சூரியின் ரசிகர் எழில் வாணன் கூறுகையில்..,”மதுரை ராஜாக்கூர் கிராமத்தைச் சேர்ந்த எங்கள் அண்ணனுக்கு எப்போதும் துணை நிற்போம். பல்வேறு கஷ்டங்களுக்கு பின்னர் வாழ்வில் முன்னேறிய நடிகர் சூரியின் கருடன் படம் வெற்றியடையும். அதற்கான கொண்டாட்டம் மதுரையில் துவங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.

 இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Garudan Movie Review: நட்பு, பகை, விஸ்வாசம்.. மீண்டும் ஹீரோவாக ஜெயித்தாரா சூரி.. கருடன் விமர்சனம் இதோ!


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Donald Trump: வரலாற்றில் முதல்முறை - 34 குற்றங்களில் டிரம்ப் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு