மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக உருவெடுத்தது. இதையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், புயலாக வலுவடைந்து பிறகு வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று வங்கதேசம்  நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது வருகின்ற மே 26ம் தேதி நள்ளிரவு வங்கதேசத்தின் சாகர் தீவு மற்றும் கேபபுரா இடையே தீவிர புயலாக கரையை கடக்கிறது. 


வானிலை ஆய்வு மையம் சொன்னது என்ன..? 


இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 12 மணி நேரத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, இன்று, மே 24, 2024 அன்று மத்திய வங்காள விரிகுடாவில் 0530 மணி நேரத்தில் மையம் கொண்டு அட்சரேகை 15.0 டிகிரிக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது N மற்றும் தீர்க்கரேகை 88.4 டிகிரி E, Khepupara (வங்காளதேசம்) க்கு சுமார் 800 கிமீ தென்-தென்மேற்கு மற்றும் கேனிங்கிற்கு (மேற்கு வங்கம்) தெற்கே 810 கிமீ தொலைவில் உள்ளது.


 இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 25ஆம் தேதி காலை கிழக்கு மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து, அது கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து, 25ஆம் தேதி மாலைக்குள் தீவிரப் புயலாக வலுவடையும். மேலும், இந்த புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து, மே 26 நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையை ஒரு கடுமையான சூறாவளி புயலாக கடக்க வாய்ப்பு உள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு..? 


இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும்,  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், நாளை முதல் 29ம் தேதி வரை, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு:


23.05.2024 முதல் 27.05.2024 வரை:


அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக  2-3°  செல்சியஸ் படிப்படியாக  உயரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.  


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்  அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.