மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில் திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில்  31 மணி நேர அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவு முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர் .


அமலாக்கத்துறை சோதனை:


தமிழகத்தில் நடைபெற்ற மணல் குவாரி முறையீடு தொடர்பாக திண்டுக்கல் தொழில் அதிபர் ரத்தினம் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று 12.09.23 காலை 9 மணி முதல் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.


இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் ரத்தினம்  மைத்துனர் கோவிந்தன் வசிக்கும் ஹனிபா நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவு செய்தனர். இந்நிலையில் திண்டுக்கல் ஜி டி என் சாலையில் உள்ள ரத்தினம்  வீடு மற்றும் அலுவலகங்களில் இரவு முழுவதும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வந்தது .


Annamalai: "துண்டு சீட்டை வைத்து பேசாதீங்க..11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு இருக்கு” லிஸ்ட் போட்ட அண்ணாமலை!




இதனைத்தொடர்ந்து 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று  தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில்  மாலை 4 மணி அளவில் சோதனை நிறைவடைந்தது. ரத்தினம் வீட்டில் 31 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை  மேற்கொண்டனர். சோதனையின் போது  ரத்தினம் வீட்டில் அவருடைய மூத்த மகன் துரைராஜ் மற்றும் அவருடைய மனைவி இளைய மகன் வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர்.


A R Rahman Concert: 20 ஆயிரம் பேருக்கு அனுமதி கேட்ட ACTC நிறுவனம்... வெளியான கடிதம்.. வெளிவந்த உண்மை!




 இதனிடையே காலையில் வங்கி அதிகாரி மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஒருவர் நகை எடை  இயந்திரம் 2 உடன்  வீட்டிற்குள் சென்று வீட்டிலிருந்த நகைகளை எடை போட்டு மதிப்பீடு செய்தனர். இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவடைந்தது நேற்று முதல் இன்று வரை 31 மணி நேரம் தொடர்ந்து அதிகாரிகள் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் சோதனை மேற்கொண்டனர் இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். சோதனையின் போது ரத்தினம்  மற்றும் மாமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு  குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Special Buses: விநாயகர் சதுர்த்திக்கு ஊருக்கு போறீங்களா? அப்போ இதை பாருங்க.. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!