Annamalai: தனது ஊழலை மறைக்கவே மத்திய அரசு சனாதன பிரச்னையை பேசிகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதற்கு பாஜக மாநில தலைவர் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்:
சனாதனம் என்ற ஒற்றை வார்த்தை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி தெரிவித்த கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், கடந்த சில தினங்களாக அதுகுறித்து பேசுவதை திமுகவினர் நிறுத்தினர். ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சிஏஜி அறிக்கை வந்துள்ளதால் அதை மறைப்பதற்காக சனாதன விவகாரத்தை பாஜக பயன்படுத்தி வருவதாக உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
வாக்குறுதி நிறைவேற்றாத பிரதமர்:
இதனை தொடர்ந்து இன்று காலை முதல்வர் ஸ்டாலின், ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், "2014ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் பிரதமர் நிறைவேற்றவில்லை. ஆனால் பாஜக என்ற கட்சியின் கஜானா மட்டும் அதிகமாக நிரம்பியது. ஊழல்களும் முறைகேடுகளும் மட்டுமே நடந்தன. இந்த இமாலய ஊழல் முகத்தை மறைப்பதற்காக சனாதனப் போர்வையைப் போர்த்திப் பதுங்கிக் கொள்ளப் பார்க்கிறது பாஜக.
நான்கு மாதங்களாக மணிப்பூர் பற்றி ஏரிகிறது. அதனை அனைக்க முதுகெலும்பு இல்லாத அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது. இதனை எல்லாம் பேசிவிடாமல் திசை திருப்ப பாஜக முயற்சிக்கிறது” என்று தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
லிஸ்ட் போட்ட அண்ணாமலை:
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிஜிஆர் எரிசக்தி மோசடி, டிரான்ஸ்பார்மர் சப்ளை மோடி, ஊட்டச்சத்து கிட் மோசடி, சிஎம்ஆர்எல் மோசடி, போக்குவரத்து மோசடி, நோபல் ஸ்டீல்ஸ் மோசடி, எச்ஆர்& சிங் மோடி, இடிஎல் உள்கட்டமைப்பு நிறுவன முறைகேடு ஆகிய முறைகேடுகள் திமுக ஆட்சியில் நடந்திருக்கின்றன.
ஒரு இலாகா இல்லாத அமைச்சர் (செந்தில் பாலாஜி) வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் சிறையில் உள்ளார். நான் கூறிய இந்த முறைகேடுகளில் இருந்து மக்களை திசை திருப்பவே சனாதனம் பற்றி உதயநிதி பேசி வருகிறார். சிஏஜி அறிக்கை குறித்து துண்டுச் சீட்டில் உள்ளதை அப்படியே படித்து உங்களை நீங்களே சங்கடப்படுத்திக் கொள்ளாதீர்கள்” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க
Fire Accident: 9 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்