தமிழகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் எண்ணிக்கை இந்த மாத ஆரம்பத்திலிருந்தே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகளின் துரித நடவடிக்கைகளும், ஊரடங்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. முககவசம் கட்டாயமாக்கப்படுதல் தடுப்பூசிகள் செலுத்துவதற்கான முக்கியத்துவத்தையும் அறிவுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கான மெகா முகாம்களும் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது.


தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன் - அந்நியன் பட பாணியில் தண்டனையை ரத்து செய்த நீதிமன்றம்




திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயது பூர்த்தி அடைந்தவர்கள், 18 லட்சத்து 30 ஆயிரத்து 800 பேர் உள்ளனர். இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் அடைந்து இருக்கிறது.


Madurai Food Corner| மதுரையை கலக்கும் மஞ்சள் பை பரோட்டா.. அதிரடி விழிப்புணர்வும்.. அள்ளும் சுவையும்


அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் என தினமும் 148 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இங்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் ஆகியவை செலுத்தப்படுகிறது. அதோடு வாரந்தோறும் மெகா முகாமும் நடத்தப்படுகிறது. இதை பயன்படுத்தி மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.



 

அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 17 லட்சத்து 34 ஆயிரத்து 155 பேருக்கு முதல் தவணையும், 12 லட்சத்து 41 ஆயிரத்து 944 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு இருக்கிறது. அதோடு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் 4 ஆயிரத்து 700 பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தி உள்ளனர்.



 

இந்த நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் 900 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். ஒமைக்ரான் வகை கொரோனா பரவுவதால் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.

 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண