உலகமே கொரோனா முதலாம் அலை தொடங்கி மூன்றாம் அலை என உயிருக்கு அஞ்சியும், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றியும் தவித்துவர கூடிய சூழல் நிலவுகிறது. பல இடங்களில் தொழிலும், வியாபாரமும் மந்தமான நிலைக்கு சென்றுவிட்டது. இதனை மீட்கும் முயற்சியாக பலரும் வித்தியாசமான யோசனைகள் கையில் எடுத்து வியாபாரத்தை சூடுபிடிக்க வைத்துள்ளனர். இதில் மதுரை(Madurai) மற்றும் சுற்று வட்டார வியாபாரிகள் வேற ரகம் என்று சொல்லும் அளவிற்கு வித்தியாசத்தை காட்டுகின்றனர்.
செல்லாத 5 பைசாவுக்கு பிரியாணி, 1 கிலோ மீன் வாங்கினால் பெட்ரோல் இலவசம், ஒரு கிலோ கறி வாங்கினால் எண்ணெய், பலசரக்கு ஜாமான் இலவசம் என கவர்சிகர விளம்பரங்களை அள்ளித் தெளிக்கின்றனர். சமீபத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் மூன்று பிரிவு பிரியாணி இலவச ஆஃபர்களை அளித்து அட்ராசிட்டி செய்தார் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர். அதே போல் ஒத்தக்கடையில் மீன் கடை அறிமுக சலுகையாக ஒரு கிலோ மீன் ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அழிந்துவரும் மஞ்சப்பை பழக்கத்தை மீண்டும் கொண்டுவர மதுரை உணவகத்தின் புதிய முயற்சி செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் எண்ணெய் புரோட்டா, பன் புரோட்டா, சிலோன் புரோட்டா என பல புரோட்டாகள் உள்ள நிலையில் கொரோனா வந்த நாள் முதல் பரோட்டாவில் புதுவிதமாக மாஸ்க் புரோட்டா கலக்கி வந்தது. இந்த நிலையில் மஞ்சப்பை வடிவில் போடப்படும் புரோட்டாக்கள் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரையை சேர்ந்த சகோதரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் மீண்டும் மஞ்சப்பை என்கின்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து அனைவரும் மஞ்சள் பையை பயன்படுத்தி சுற்றுப்புறச் சூழலுக்கு உதவ வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருந்தது அதனை வரவேற்கும் பொருட்டு மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள உணவகத்தின் புதிய முயற்சியாக மீண்டும் மஞ்சப்பை புரோட்டா மற்றும் பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மஞ்சப்பை, மாஸ்க் வழங்கி ஊக்குவிக்கின்றனர்.
மதுரையில் உள்ள சுப்பு அசைவ உணவகத்தை சகோதரர்களான நவநீதன் (47), குணா (28) ஆகியோர், கடந்த 50 ஆண்டுகள் தலைமுறையாக நடத்தி வருகின்றனர். தொடர்ந்து உணவகங்களில் பிளாஸ்டிக்கை தவிர்க்கும் பொருட்டு பார்சல் வாங்கி வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கியும், முகங்களை வழங்கியும் தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கடை உரிமையாளர் நவநீதன் கூறுகையில், “அதிகமாக பிளாஸ்டிக் பைகள் உணவகங்களில் பயன்படுத்த படுகின்றது அதை தடுக்கும் வகையில் இப்படி. மஞ்சப்பை வடிவில் போடப்படும் புரோட்டாக்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. மஞ்சப்பை எப்படி இருக்குமோ அதே வடிவத்தில் புரோட்டாக்களை மாஸ்டர்கள் வடிவமைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றார் ஒரு புரோட்டா 20 ரூபாய் இது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளன.
அழிந்துவரும் மஞ்சப்பை பழக்கத்தை மீண்டும் கொண்டுவர எங்கள் கடையில் உணவு வாங்குபவர்களுக்கு மஞ்சப்பை கொடுத்து அனுப்புகிறோம். அது மட்டும் இன்றி கொரோனா பரவலை தடுக்க பயன்படும் முக கவசத்தையும் ஒரு பிரியாணி வாங்கினால் இரண்டு முக கவசமும், முழு கிரில் சிக்கன் வாங்கினாள் 4 முக கவசம், சிக்கன் ரைஸ், நூடுல்ஸ் வாங்கினால் இரண்டு முக கவசம், என பொருள்கள் வாங்குபவர்களுக்கு முகக்கவசம் கொடுத்து விழிப்புணர்வு செய்து வருகிறேன்” என தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!