திருச்சி துறையூர், பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (37). இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இவர் வினோத மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். குடும்பத்துடன், தந்தை குப்புசாமியுடன் வசித்து வந்தார். அப்பொழுது, கடந்த 23.03.2015 ஆம் ஆண்டு அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டார். தந்தையிடம் பணம் கேட்டிருந்தார் கொடுக்காத ஆத்திரத்தில் தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டார் என்று உப்பிலியாபுரம் போலீசார் துரைராஜ் மீதி வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கூட்டுறவு சங்கங்களுக்கான தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நெல்லையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம் - தாமிரபரணி படுகையில் 2 நாட்கள் நடைபெறுகிறது
மேலும், இது குறித்து திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட நீதிமன்றம், தந்தையை கொலை செய்த துரைராஜ்க்கு, ஆயுள் தண்டனை விதித்து கடந்த 6.11.2018ல் தீர்ப்பு வழங்கினார். இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி, துரைராஜ், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நெல்லையில் இயற்கை விவசாயிகளுக்காக தனி விற்பனை அங்காடி திறப்பு
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயசந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள துரைராஜ் வினோதமான மன நோயால் (Chronic Paranoid Dchizoprenac) பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவர் என்ன செய்கிறோம் என்ற சுய நினைவு இல்லாமல், தந்தை மீது கல்லை போட்டு உள்ளார். இந்த சூழலில் இவரை தண்டிப்பது ஏற்புடையது அல்ல. எனவே, துரைராஜூக்கு திருச்சி மாவட்ட நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சேலம் பனைமரத்துப்பட்டி ஒன்றியத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் - கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்கள் திமுகவுக்கு ஆதரவு