Zomato: பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ, தனது ட்விட்டர் பக்கத்தில் காமெடியாக ஒரு ட்வீட் செய்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சோமேட்டோ:
மக்களிடையே ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகரித்து விட்ட இன்றைய கால கட்டத்தில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் தொடங்கி உணவு வரைக்கும் ஆர்டர் போட்டு இருக்கும் இடத்தில் இருந்தே வாங்கி சாப்பிட முடிகிறது. குறிப்பாக ஃபுட் டெலிவரியானது தற்போது இந்திய மக்களிடையே பெரும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. காலை, இரவு நேரங்களில் வாகனங்களில் ஆர்டர் கொடுக்கப்பட்ட உணவுப் பொருளை எடுத்துக் கொண்டு சோமேட்டா, ஸ்விக்கி டெலிவரி மேன்கள் சாலைகளில் சிட்டாக பறப்பதை காணமுடியும். பொதுவாக ஒரு ஓட்டலில் சென்று சாப்பிடுவதை விட சோமேட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்து சாப்பிடுவது கொஞ்சம் காஸ்ட்லியானது என்றே வாடிக்கையாளர்களின் கருத்தாக இருக்கிறது. சில நேரங்களில வாடிக்கையாளர்களை கவர ஆஃபர்களையும் இந்த உணவு விநியோக நிறுவனங்கள் அள்ளி தருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் உள்ள உணவு விநியோக தளங்களில் அதிகப்படியான பயனர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் சோமேட்டோ நிறுவனமும் ஒன்று.
வைரல் ட்வீட்:
இந்நிலையில், சோமேட்டோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் காமெடியாக ஒரு ட்வீட் செய்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, போபால் அங்கிதா, தயவு செய்து உன்னுடைய முன்ளாள் காதலனுக்கு கேஷ் ஆன் டெலிவரி வாயிலாக உணவு ஆர்டர் செய்வதை நிறுத்துங்கள். மூன்றாவது முறையாக உன் பாய் பிரெண்ட் பணம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார்" என சோமேட்டோ கலகலப்பாக ட்வீட் செய்துள்ளது.
இந்த பதிவை கிட்டதட்ட 4 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 552 பேர் கமெண்ட் செய்துள்ளனர். 5,800 பேர் லைக் செய்துள்ளனர். இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க