75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி அவர் ஆற்றிய உரையில் பெண்களின் சக்தி குறித்து பேசியிருந்தார்.


75வது சுதந்திர தினம்


நாட்டின் 75 வது சுதந்திர தினம், மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று பலர் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றியுள்ளனர். பொது இடங்கள், வீடுகளில் மூவர்ணக் கொடிகள் பட்டொளி வீசிப்பறக்கின்றன. மூவர்ண கொடியின் அலங்காரங்கள், மூவர்ண விளக்குகள் கண்களைப் பறிக்கின்றன. இன்று காலையில் காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டைக்கு வருகை தந்த அவரை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.


தொடர்புடைய செய்திகள்: Patriotic Songs Tamil: வந்தே மாதரம்... தாயின் மணிக்கொடி...தேசப்பற்றுக்கான டாப்-10 தமிழ் பாடல்கள்..!



தேசியக்கொடி ஏற்றம்


பின்னர் முப்படைகளின் மரியாதையை ஏற்ற அவர், விழா மேடைக்குச் சென்றார். சரியாக 7.30 மணிக்கு, வண்ணமயமான அலங்காரங்களால் ஜொலிக்கும் டெல்லி செங்கோட்டையில், மோடி முப்படையினரின் அணிவகுப்பு மற்றும் மரியாதையை ஏற்று 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பல நாடுகளின் தூதர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்: Independence Day 2022 Wishes: 75-வது சுதந்திர தினம்: வாழ்த்துகள், புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கே..!


தேசிய கீதம்


பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்தவுடன், நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் 4 ஹெலிகாப்டர்கள் மூலம் வானத்தில் இருந்து தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அதன் பிறகு 'சாரே ஜஹான் சே அச்சா' பாடல் முழங்க வீரர்கள் பரேட் நடத்தினர். அதன் பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக சுதந்திர தின உரையை ஆற்றினார்.



தொடர்புடைய செய்திகள்: 3 வருஷம் ஜெயில்தான்! தேசியக்கொடி ஏற்றும்முன் இதிலெல்லாம் கவனம் தேவை! முழு விவரம்!


பெண் சக்தி குறித்து மோடி


அந்த உரையில் நிறைய விஷயங்களை பேசிய அவர், பெண்கள் மற்றும் அவர்களது சக்தி குறித்து முக்கியமாக பேசினார். அவர் பேசுகையில், "இந்தியாவின் வளர்ச்சிக்கு நாம் நமது பெண் சக்திக்கு துணையாக இருக்க வேண்டும். பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதுவே இந்திய வளர்ச்சிக்கான தூண். நம் பேச்சிலும், செயலிலும் பெண்களின் மாண்பைக் குறைக்கும் சிறிய வெளிப்பாடு கூட இருக்கக் கூடாது. நம் தேசத்தின் மகள்கள், தாய்மார்கள் நாட்டுக்காக பெரும் பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். சட்டம், கல்வி, அறிவியல், காவல்துறை என நம் தினசரி வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் பெண் சக்தியின் பங்களிப்பு அளப்பரியதாக திகழ்கிறது", என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.